சொத்துப் பிரச்னையில் அடிக்கடி சகோதரர்கள் இடையே சண்டை வருவதுண்டு. ஒரு சென்ட் நிலத்திற்காக பிரச்னையை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்வதை பார்த்து இருக்கிறோம். உத்தரப்பிரதேசத்தில் நிலப்பிரச்னையில் மகன் தனது சொந்த தாயாரை தீவைத்து எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலிகரில் உள்ள கெயிர் போலீஸ் நிலையத்திற்கு நிலப்பிரச்னைக்காக இரு தரப்பினர் வந்திருந்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து புகார் கொடுத்திருந்த ஹேமலதா, போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வந்தார். அவருடன் அவரது மகன் கெளரவும் வந்தார். அப்போது, போலீஸ் நிலைய வளாகத்தில் திடீரென கெளரவ் தனது தாயார் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். அதோடு ஹேமலதா தீயில் எரிந்த போது அதனை கெளரவ் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தார். இதில் அப்பெண் 5 நிமிடத்துக்கு மேல் தீயில் எரிந்தார்.
அதற்குள் போலீஸார் ஓடி வந்து தண்ணீர் மற்றும் மண்ணை போட்டு தீயை அணைத்தனர். இதில் சில போலீஸாரும் லேசான காயம் அடைந்தனர். தீபற்றியதில் அப்பெண் 40 சதவீதம் அளவுக்கு காயம் அடைந்தார். அவர் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் ஹேமலதா சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் கெளரவை போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸ் நிலைய வளாகத்தில் நடந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. இது குறித்து போலீஸ் அதிகாரி ராஜிவ் திரிவேதி கூறுகையில், ”ஹேமலதலா தனது உறவினர்கள் மீது நிலப்பிரச்னையில் புகார் கொடுத்திருந்தார். அது குறித்து பேச இரு தரப்பினரையும் அழைத்திருந்தோம். திடீரென ஹேமலதாவை அவரது மகன் பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டான்” என்றார். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88