தாவரங்கள் மட்டுமன்றி ஓடுவது, பறப்பது என பல உயிரினங்களை உலகின் பல்வேறு நாட்டில் உள்ள மக்கள் விருப்பமாக சாப்பிடும் போதும் ஊர்வனவற்றை வெகு சிலரே விரும்புகின்றனர். ஆனால், தாய்லாந்து நாட்டில் ஆயிரக்கணக்கான மலைப்பாம்புகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மத்திய தாய்லாந்தில் உள்ள பண்ணைகளில் அதிகளவு வளர்க்கப்படும் இந்த மலைப்பாம்புகள் ஒரு சிறிய காண்ணாடி கூண்டுக்குள் சுருண்டுபடுத்திருப்பதோடு அதன் அருகே செல்லும் போது கண்ணாடியை ஆக்ரோஷமாக தாக்கி புதியவர்களுக்கு திகிலையும் ஏற்படுத்துகிறது. காலம் காலமாக தாவர உணவு […]