மொபைல் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு கர்ப்பிணிப் பெண்களை பாதிக்கும் என்று பலரும் சொல்லிவரும் நிலையில், அது தொடர்பாக சமூக ஊடகங்களில் ட்ரோல், சினிமா என பல ஊடகங்களும் மொபைல் டவர்களின் கதிர்வீச்சு பற்றிய பல கேள்விகளை எழுப்பின.
இந்த கேள்விகளின் உச்சகட்டமாக எந்திரன் 2.0 திரைப்படத்தின் பக்ஷி ராஜன் வில்லனாக மாறி, மொபைல் டவர்கள் தொடர்பான பல கேள்விகளை எழுப்பினார். சூப்பர் ஸ்டார் நடித்து பிரபலமாக்கிய மொபைல் டவர் சர்ச்சைக்குத் தான் தற்போது அரசு முடிவு சொல்லியுள்ளது.
வெறும் கேள்விக்கான பதிலாக தொழில்நுட்ப ரீதியாக மொபைல் டவர்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த புலம் (EMF) கதிர்வீச்சை, தற்போதைய வரம்பை விட பத்து மடங்குக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்றும் அரசு பரிந்துரைத்துள்ளது.
மொபைல் கதிர்வீச்சு கர்ப்பிணிப் பெண்களை பாதிக்குமா? என்ற கேள்விக்கான பதிலை தொலைத்தொடர்புத் துறை மற்றும் சுகாதார அமைச்சகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய அரசாங்கக் குழு தற்போது கொடுத்துள்ளன. அயனியாக்கம் செய்யாத கதிர்வீச்சு பாதுகாப்புக்கான சர்வதேச ஆணையத்தின் (ICNIRP) 2020 விதிமுறைகளுக்கு இணங்க இது செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் நெட்வொர்க் கவரேஜை மேம்படுத்துவதற்கும், அதிக டவர்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தைக் குறைப்பதற்கும், மொபைல் டவர்களை தற்போதைய வரம்பை விட பத்து மடங்குக்கு மேல் அதிகரிக்க வேண்டுமேன தற்போதைய பரிந்துரை பரிந்துரைத்துள்ளது.
தொலைத்தொடர்பு துறையின் பரப்புரை அமைப்பான COAI யும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது. அயனியாக்கம் செய்யாத கதிர்வீச்சு பாதுகாப்புக்கான சர்வதேச ஆணையம் ICNIRP ((International Commission on Non-Ionizing Radiation Protection), கர்ப்பிணிகளுக்கு மொபைல் டவர் கதிர்வீச்சுகள் பாதுகாப்பானவை என்று தெரிவித்துளது.
கதிர்வீச்சு வரம்பு
மொபைல் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு வரம்பை 10 மடங்கு அதிகரித்தாலும் மக்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் அல்லது விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று குழு கூறுகிறது. இது மொபைல் நெட்வொர்க்கை மேம்படுத்துவதால், மேலும் அதிக டவர்களை நிறுவ வேண்டிய அவசியமில்லை. ஆனால், மொபைல் நெட்வொர்க்கை மேம்படுத்துவதற்காக செய்யப்படும் கதிர்வீச்சு வரம்பு அதிகரிப்பு என்பது மக்களின் சந்தேகத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் அரசுக் குழு எச்சரிக்கிறது.
மொபைல் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை (EMF) 10 மடங்கு அதிகரிக்க அறிவுறுத்தியிருந்தாலும், இது தொடர்பான மக்களின் எதிர்ப்புகள் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும், இதனை மக்களால் நம்ப முடியாது என்பதையும் அரசுக் குழு ஒப்புக் கொண்டுள்ளது.
மக்களின் கவலைகள்
கதிர்வீச்சு ஒரு உடல்நலக் கேடு என்று சிலர் நினைக்கிறார்கள். மக்களின் இந்த கவலையை குறைக்க அரசு விரும்புகிறது. கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் அளவு மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என்று இந்தியாவில் ஏற்கனவே சட்டம் உள்ளது.
இந்த அளவு ICNIRP அளவை விட 10 மடங்கு குறைவு. ஆனால் இதுபோன்ற குறைந்த கதிர்வீச்சு காரணமாக போன் நெட்வொர்க் சரியாக வேலை செய்யாது, மேலும் டவர்களை நிறுவ வேண்டியிருக்கும் என்று மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன
அகற்றப்பட்ட மொபைல் டவர்கள்
தொலைத்தொடர்பு கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பிரச்சினை, எவ்வளவு குறைவாக இருந்தாலும், எப்போதும் மிகவும் உணர்திறன் வாய்ந்தது என்பதை மறுக்க முடியாது என்று COAL டைரக்டர் ஜெனரல் (ஓய்வு ) லெப்டினன்ட் ஜெனரல் எஸ்பி கோச்சார் கூறுகிறார். கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சேர்ந்த மக்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனங்களும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பல இடங்களில் மக்களின் போராட்டத்தில் ஏற்கனவே நிறுவபப்ட்ட மொபைல் டவர்களும் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ICNIRP விதிகள்
மொபைல் டவர்களில் இருந்து வெளியாகும் ரேடியோ அலைகள் (EMF) தொடர்பான விதிகளை மாற்றாவிட்டால், இந்தியாவில் 5Gயின் வேகம் மற்றும் தரம் பாதிக்கப்படும். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கோச்சார், இது நிகர வேகத்தை குறைக்கும், நெட்வொர்க் மோசமடையும் மற்றும் சிக்னலும் பலவீனமாக இருக்கும் என்று கூறுகிறார்.
இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து, எகிப்து, உகாண்டா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் ICNIRP விதிகள் ஏற்கனவே அமலில் இருப்பதாக அவர் கூறுகிறார். இது தொடர்பாக தொலைத்தொடர்பு செயலாளர் நீரஜ் மிட்டலுக்கும் COAI ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.