BSNL VS Jio… பயனர்களை மகிழ்விக்கும் ப்ரீபெய்ட் பிளான் எது… ஒரு ஒப்பீடு..!!

BSNL VS Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், தற்போது பெரும்பாலான மக்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர். அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் எந்த வகையிலும் கட்டணத்தை உயர்த்தவில்லை. பிஎஸ்என்எல் திட்டங்கள் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு பெரும் நன்மைகளையும் வழங்கி வருவதன் காரணமாக மக்கள், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அதிக நன்மைகள் மற்றும் பலன்களை பெற எந்த ரீசார்ஜ் திட்டம் சிறந்தது என்பதைக் கண்டறிய, இன்று BSNL 997 திட்டம் மற்றும் Jio 999 திட்டத்தை ஒப்பிட்டு அறிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.997 Plan Details)

எஸ்என்எல் வழங்கும் ரூ.997 திட்டத்தில், பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா, எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் தினமும்100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் வழங்கப்படும்.

பேக் செல்லுபடியாகும் காலம்: 160 நாட்கள்
மொத்த தரவு: 320 ஜிபி
அதிவேக டேட்டா: 2 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
SMS: 100 SMS/நாள்

160 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில், சில பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் பயனர்களுக்கு கிடைக்கும். 160 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வசதியுடன், இந்த திட்டம் மூலம் பயனர்களுக்கு மொத்தம் 320 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio 999 Plan Details)

ரூ.999 கட்டணத்தில் கிடைக்கும் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில், நீங்கள் 2 ஜிபி அதிவேக டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றின் பலனைப் பெறுவீர்கள். 98 நாட்களின் வேலிடிட்டியை வைத்து பார்க்கும் போது, இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி வீதம் மொத்தம் 196 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது.

பேக் செல்லுபடியாகும் காலம்: 98 நாட்கள்
மொத்த தரவு: 196 ஜிபி
அதிவேக டேட்டா: 2 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்

BSNL VS Jio: பயன் தரும் திட்டம் எது?

இரண்டு திட்டங்களுக்கான கட்டணத்தை ஒப்பிடும் போது 2 ரூபாய் என்ற அளவில் சிறிய வித்தியாசம் தான் உள்ளது. ஆனால் இரண்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை பார்த்தால் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்கள். ஒருபுறம் ஜியோ திட்டம் 98 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும், மறுபுறம் நீங்கள் BSNL திட்டம் 160 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

டேட்டா அளவில் உள்ள வித்தியாசத்தைப் பற்றி பேசுகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டம் ஜியோவை விட 124 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக, ஜியோவுடன் ஒப்பிடும்போது பிஎஸ்என்எல் திட்டத்தின் கட்டணம் குறைவாக உள்ளது. ஆனால் தரவு மற்றும் செல்லுபடியாகும் நாட்கள் அடிப்படையில், பிஎஸ்என்எல் நிச்சயம் பலனைக் கொடுக்கக் கூடியது.

உங்கள் சிம்மை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போர்ட் செய்வது எப்படி?

முதலில், உங்கள் மொபைலில் இருந்து 1900 என்ற எண்ணுக்கு உங்கள் மொபைல் எண்ணை குறிப்பிட்டு ‘Port [space] 10 digit mobile number’ என்று SMS அனுப்ப வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட போர்டிங் குறியீடு (UPC) கிடைக்கும். ஜம்மு காஷ்மீர் ப்ரீபெய்டு சந்தாதாரர்களைப் பொறுத்தவரை, எஸ்எம்எஸ் அனுப்புவதற்குப் பதிலாக 1900 என்ற எண்ணை அழைக்க வேண்டும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.