Serial Updates: `மகாநதி தொடரில் கண்மணி; கர்ப்பமான செய்தியை அறிவித்த `கனா காணும் காலங்கள்' பிரபலம்!

* விஜய் டிவியில் ஒளிபரப்பான `பாரதி கண்ணம்மா’ தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கண்மணி. அந்தத் தொடருக்குப் பிறகு கதாநாயகியாக ஜீ தமிழில் ஒளிபரப்பான `அமுதாவும் அன்னலட்சுமியும்’ தொடரில் நடித்திருந்தார்.

கண்மணி

சமீபத்தில் அவருக்கும் சன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அஷ்வத்திற்கும் பெரியவர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து சமூகவலைதளப் பக்கங்களில் ஜோடியாகச் சேர்ந்து ட்ரெண்டிங் கான்செப்ட்களில் ரீல்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த ரீல்ஸ்களுக்கும் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், கண்மணி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `மகாநதி’ தொடரில் கேமியோ ரோலில் என்ட்ரியாகி இருக்கிறார்.

* விஜய் டிவியின் சார்பாக விஜய் நட்சத்திரக் கொண்டாட்டம் வெவ்வேறு ஊர்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் 14, 15-ம் தேதி விருத்தாச்சலம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் திரையில் பார்த்து ரசித்த நடிகர்களை நேரில் பார்ப்பதற்கு பலரும் ஆவலுடன் வந்திருந்தனர். 

விஜய் நட்சத்திர கொண்டாட்டம்

இந்த நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து சுசித்ரா மற்றும் அக்ஷிதா, சக்திவேல் தொடரிலிருந்து பிரவீன் ஆதித்தியா மற்றும் அஞ்சலி பாஸ்கர், மகாநதி தொடரிலிருந்து ஸ்வாமிநாதன் மற்றும் லட்சுமி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். தவிர, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்தும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலிருந்தும் சிலர் கலந்து கொண்டனர். அதேபோல வருகிற 21, 22-ம் தேதி திருப்பூர் மற்றும் ஈரோட்டில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது. இதில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்கிற அறிவிப்பு விரைவில் விஜய் டிவியில் வெளியாகும்.

* `தமிழும் சரஸ்வதியும்’ தொடரின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தர்ஷனா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `பூவா தலையா’ தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். இந்தத் தொடரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை சித்தாரா நடித்தார். பல எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய தொடர் தற்போது 218 எபிசோடுடன் நிறைவடைந்திருக்கிறது.

பூவா தலையா

இந்தத் தொடரில் நடித்திருந்த நடிகர் பாண்டி கமல் அதே சன் தொலைக்காட்சியில் லீட் ரோலில் ஒரு தொடரில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகி இருக்கிறது. ஆர்ஜே, விஜே, ஆக்டர் எனப் பயணித்தவர் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 

* `கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸின் மூலம் ரசிகர்களிடையே பரிச்சயமானவர் நரேஷ். இவருக்கும் மாதவி என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

கனா காணும் காலங்கள் நரேஷ்

தற்போது மாதவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இருவரும் சோசியல் மீடியாவில் பரவலாக கன்டென்ட் பதிவிட்டு வருபவர்கள். `We are 26 and happily pregnant’ என்கிற கேப்ஷனுடன் அது சார்ந்த வீடியோக்களையும் பதிவிட்டிருக்கிறார் நரேஷ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.