கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்களுக்கான புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையில் கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மாகாண புற்றுநோய் தடுப்பு பிரிவினரின் பூரண வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெண்களுக்கு ஏற்படுகின்ற புற்று நோய்கள் தொடர்பிலான விசேட விளக்கங்களும், தெளிவூட்டல்களும், புற்று நோய்களுக்கான அடையாளங்கள் தொடர்பில் முற்காப்பு நடவடிக்கை தொடர்பிலான தடுப்பு செயல்திட்டங்களை நடைமுறை படுத்தல் தொடர்பில் விளக்க உரையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்கள் கலந்து பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.