மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் திட்ட முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான சிவநேசத்துறை சந்திரகாந்தன் தலைமையில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கடந்த காலங்களில்  நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்  நடைபெற்றது. 

மாவட்ட அரசாங்க அதிபர்  ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (18) திகதி இடம் பெற்ற  நிகழ்வில் வாகனேரி, குஞ்சங்குளம், கிரிமிச்சை, வெப்பைவெட்டுவான், வட்டவான்  போன்ற பல பிரதேசங்களில் மக்கள் குடிநீர் பெற்றுக் கொள்வதில் அசௌகரியங்கள் குறித்து இதன் போது அதிகாரிகளுக்கு   இராஜாங்க அமைச்சர் தெளிவு படுத்தினார்.

அத்துடன் மக்களின் அடிப்படைத் தேவையான குடி நீர்ரை  மிக விரைவாக வழங்க வேண்டும் என பணிப்புரை விடுத்தார்.

இப் பிரதேசங்களுக்கு நீர் வழங்கலுக்குத் தடையாக உள்ள காரணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன் மக்களின் குடி நீர் வழங்குவதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நீர் ஊற்று உள்ள பிரதேசங்களில் புதிய கிணறுகளை அமைத்தல் அல்லது பழைய கிணறுகளின் ஆழத்தை அதிகரித்து சுத்தமான குடிநீரை வடிகட்டி மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்வில் வாகரை பிரதேச செயலாளர் ஜி.அருணன், தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்கள பொறியியலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன், உயர் அதிகாரிகள்  என பலர் கலந்து கொண்டனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.