மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் திட்டம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு ஏற்ப ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (17) மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இராஜாங்க அமைச்சரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான காதர் மஸ்தான் கலந்து சிறப்பித்திருந்தார்.

இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரையானது காணொளி வாயிலாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மன்னார் கல்வி வலயத்தைச் சேர்ந்த 428 மாணவர்ளும், மடு வலயத்தைச் சேர்ந்த 402 மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் தெரிவு குடும்பங்களில் உயர்தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6000 ரூபா வீதமும், தரம் ஒன்றுமுதல் 11 வரையான மாணவர்களுக்கு 3000 ரூபாவும் என 24 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.