IND vs SL: இந்திய அணி அறிவிப்பு… கேப்டன்ஸியில் ட்விஸ்ட் – யார் யாருக்கு வாய்ப்பு?

IND vs SL, Team India Squad Announced: இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களை விளையாட இருக்கிறது. மூன்று டி20 போட்டிகள் முறையே ஜூலை 27, 28, 30 ஆகிய மூன்று நாள்களில் நடைபெறுகிறது. மூன்று ஓடிஐ போட்டிகள் முறையே ஆக. 2, 4, 7 ஆகிய மூன்று நாள்களில் நடைபெறுகிறது. இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 

டி20 உலகக் கோப்பை தொடரோடு தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, கௌதம் கம்பீரை புதிய தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ அறிவித்தது. கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை இந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து தொடங்குகிறார். அந்த வகையில், டி20 மற்றும் ஐடிஐ தொடர்களான இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பளிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.   

டி20 ஸ்குவாட்

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மான் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்

#TeamIndia’s squad for 3 T20Is & 3 ODIs against Sri Lanka announced

Read More #SLvIND

— BCCI (@BCCI) July 18, 2024

ஓடிஐ ஸ்குவாட்

ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மான் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.