சஞ்சு சாம்சனைப் போல் ஓரங்கட்டப்படும் ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக்குக்கு அதிர்ஷ்டம்

Cricket News Tamil : இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கம்போல் இந்த தொடருக்கும் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அவரை டி20 தொடருக்கு மட்டும் எடுத்திருக்கும் பிசிசிஐ, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை. இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒருநாள், டி20 என அனைத்து வடிவ போட்டிகளிலும் சஞ்சுசாம்சன் எவ்வளவு தான் சிறப்பாக ஆடினாலும், அவருக்கான வாய்ப்பை பிசிசிஐ கொடுப்பதே இல்லை. ஒருவேளை தப்பித் தவறி ஒட்டுமொத்தமான அணியில் தேர்வு செய்தாலும் பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கொடுப்பதில்லை. இத்தனைக்கும் தென்னிப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடியதுடன் சதமும் அடித்திருந்தார்.

ஆனால் அவரை எந்த காரணத்துக்காக இலங்கை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என தெரியவில்லை. அதேநேரத்தில் ஷிவம் துபே, ரியான் பராக், சுப்மன் கில், ரிஷப் பன்ட் ஆகியோருக்கு ஒருநாள் போட்டி மற்றும் டி20 என இரு தொடர்களிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான் பிசிசிஐ செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பலரும் விமர்சிக்கின்றனர். நன்றாக விளையாடாத பிளேயர் என்றால் பரவாயில்லை, கிடைக்கும் வாய்ப்பில் சிறப்பாக விளையாடி சதமடித்த சஞ்சு சாம்யனைப் போன்ற பிளேயரை வேண்டுமென்றே பிசிசிஐ ஓரங்கட்டுது தெரிகிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இதேபோல் ருதுராஜ் கெய்க்வாட்டும் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் அவரை இந்திய அணியில் தேர்வு செய்யாமல் ஒன்றிரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடும் ரியான் பராக் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது வினோதமாக இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அண்மையில் நிறைவடைந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக ஆடி சதமடித்தவர் அபிஷேக் சர்மா.

அவரையும் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், ஆள்பலம் இருப்பவர்களின் பரிந்துரையின்பேரில் இந்திய அணி தேர்வு செய்யப்படுவதாகவும், பிசிசிஐ சாதிய மனப்பான்மையோடு நடந்து கொள்வதும் வெளிப்படையாக தெரிவதாக கிரிக்கெட் ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒவ்வொருமுறையும் பிசிசிஐ தொடர்ச்சியாக அணித் தேர்வில் பாரபட்சம் காட்டுவது கண்டனத்துக்குரியது என்றும் கடும் விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.