சிக்கலில் மைக்ரோசாஃப்ட்… விமான சேவை முதல் வங்கிகள் வரை… அனைத்தும் முடங்கும் அபாயம்..!!

இணைய பாதுகாப்பு கம்பெனியான கிரவுட்ஸ்டிரைக்கில் ( CrowdStrike) ஏற்பட்ட பாதிப்பு ஒன்றின் காரணமாக மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சிக்கலில் உள்ளதால், உலகின் பெரும்பாலான வங்கிகள், செய்தி நிறுவனங்கள், ஐடி துறை என அனைத்தும் முடங்கியுள்ளது. அமெரிக்காவின் 911 சேவை, லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட பல முக்கிய தளங்கள் முடங்கியிருக்கின்றன.

உலக அளவில் வர்த்தம், போக்குவரத்து, ஐடி, செய்திகள் என பல துறைகளில் கணிணி பயன்பாடு தான் ஆதாரமாக இருக்கிறது. கணிகளில் விண்டோஸ்தான் இயங்குதளமாக இருக்கும் நிலையில், அதனை உபயோகப்படுத்தும் பலருக்கும் BSOD என்னும் BLUE SCREEN OF DEATH என்னும் திரை தோன்றியுள்ளது. கணிணியில் எதையுமே நம்மால் இயக்க முடியாது என்பதே இதன் பொருள். விண்டோஸ் மென்பொருளின் பாதுகாப்பினை உறுதி செய்துவரும் சைபர் பாதுகாப்பு தளமான ஃபேல்கன் சென்சாரில் ஏற்பட்ட சிக்கல் தான் இது பிரச்சனைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

பலர் தங்கள் லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் ரீஸ்டார்ட் அம்சத்தில் சிக்கியிருப்பதை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த பிரச்சனை, அமெரிக்காவில் பல்வேறு விமான நிறூவனங்களின் சேவைகள் முடக்கி, விமானங்களை ரத்து செய்யும் அளவிற்கு பாதித்துள்ளது.இந்தியாவில், இண்டிகோ, ஆகாசா மற்றும் ஸ்பைஸ்ஜெட்  விமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் முடங்கியிருப்பதால், உள்ளூர் விமானங்களில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு கோவா உள்ளிட்ட விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் கைகளால் எழுதிக்கொடுக்கப்பட்டு வருகிறது.சென்னை விமான நிலையத்தின் கம்யூட்டர் சர்வர்களில் ஏற்பட்ட பிரச்னையால் 27 விமானங்கள்ளின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப சிக்கலை கிரவுட்ஸ்டிரைக் நிறுவனத்த்ன் தொழில்நுட்ப நிபுணர்கள் கண்டறிந்துவிட்டதாகவும், அதனை சரி செய்ய தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் கிரவுட்ஸ்டிரைக்  கூறியுள்ளது. ஆனாலும், சிக்கல் தீர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என தெரியவில்லை. சில மணி நேரத்திற்கு இயங்கவில்லை என்றாலும், உலக அளவில் இது மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.