கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் திருநறையூரில் உள்ள சித்தநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான தரிசு நிலம் மீட்கப்பட்டது.
சித்தநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான தரிசு நிலம் திருநறையூரில் இருந்துள்ளது. இந்த நிலத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், அந்த தரிசு நிலம் சித்தநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமானது என ஆவணங்கள் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அறநிலையத் துறை கும்பகோணம் உதவிய ஆணையர் சாந்தா தலைமையில், ஆலய நிலங்கள் மீட்பு வட்டாட்சியர் செந்தில், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சீனிவாசன், செயல் அலுவலர் பா.பிரபாகரன் மற்றும் கோயில் பணியாளர்கள், அந்த இடத்திற்கு சென்று ரூ.1 கோடி மதிப்பிலான 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட தரிசு நிலத்தை மீட்டு, சுற்றிலும் முள்வேலி அமைத்து எச்சரிக்கை பலகை வைத்தனர்.