செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய ரகசியத்தை கண்டறிந்த கியூரியாசிடி ரோவர்! கந்தகத்தில நாத்தமே இல்ல???

சிவப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வரும் கியூரியாசிடி ரோவர் தற்போது அந்த கிரகத்தின் Gediz Vallis சேனலை ஆராய்ந்து வருகிறது, 5-கிலோமீட்டர் உயரமான மலையில் உள்ள ஒரு பள்ளம். அதிலுள்ள ஒவ்வொரு அடுக்கும் செவ்வாய் கிரகத்தை பற்றிய ரகசியங்களை புதைத்து வைத்துக் கொண்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் வெவ்வேறு காலகட்டத்தைக் குறிக்கும் இந்த மலையை ஆராய்ந்தால் செவ்வாய் கிரகத்த்தைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.  

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் பல கண்டுபிடிப்புகளை செய்துள்ள நிலையில், அதன் அண்மை ஆராய்ச்சி விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மே மாதம் நாசாவின் கியூரியாசிடி ரோவர், செவ்வாய் கிரகத்தின் சில கற்களை உடைத்து பார்த்த போது மஞ்சள் கந்தக படிகம் கிடைத்துள்ளது. இது முதன்முறையாக செவ்வாய் கிரகத்தில் கிடைத்துள மஞ்சள் கந்தக படிகம் ஆகும்.  இது மிகவும் தூய்மையான கந்தக வடிவம் என்பது தான் இந்தக் கண்டுபிடிப்பின் சிறப்பு ஆகும்.

தூய்மையான கந்தகத்தால் செய்யப்பட்ட கற்களைக் கண்டறிவது என்பது பாலைவனத்தில் ஒரு சோலையைக் கண்டறிவது போன்றது என க்யூரியாசிட்டியின் திட்ட விஞ்ஞானி அஷ்வின் வாசவாடா தெரிவித்தார்.

நாசாவின் கியூரியாசிடி ரோவரின் இந்தக் கண்டுபிடிப்பு சல்பேட்டுகள் நிறைந்த பகுதியில் கிடைத்துள்ளது.  கியூரியாசிட்டி மூலம் மேற்கொள்ளப்பட்ட சல்பேட் என்பது கந்தகத்தை உள்ளடக்கிய ஒரு வகையான உப்பு என்பதும், இது நீர் ஆவியாகிய பிறகு உருவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில் இதற்கு முன்னரும் கந்தகம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அவை கந்தக அடிப்படையிலான கனிமங்கள் ஆகும். ஆனால் கியூரியாசிட்டியின் அண்மை கண்டுபிடிப்பில் பாறையில் தனிம அல்லது தூய கந்தகம் உள்ளது என்பதும், அந்தப் பகுதிகளில் உள்ள பல இடங்களில் பல கற்களில் கந்தகம் தூய வடிவில் இருக்கும் என நம்பப்படுகிறது.

கந்தகத்தை உருவாக்க தேவையான நிலைமைகள் இந்த குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் இதுவரை அனுமானிக்கவோ இல்லை கண்டறியவோ இல்லை, அதனால் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

விசித்திரமான மற்றும் எதிர்பாராத விஷயங்களைக் கண்டுபிடிப்பதுதான் இந்த செய்வ கிரக ஆய்வை உற்சாகப்படுத்துகிறது என்று அஸ்வின் கருதுகிறார்.

அதுமட்டுமல்ல, பொதுவாக சல்பர் அழுகிய முட்டையிலிருந்து வெளிப்படும் வாசனையைக் கொண்டது. இந்த துர்மணம், ஹைட்ரஜன் சல்பைட் வாயுவால் ஏற்படுகிறது. ஆனால், தற்போது விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தின் பாறையில் இருந்து கண்டறிந்திருக்கும் கந்தக தனிமத்தில் மணம் இல்லை.  

கியூரியாசிட்டியின் ஆராய்ச்சி
செவ்வாய் கிரகத்தின் Gediz Vallis சேனலை ஆராய்ந்து வரும் கியூரியாசிட்டி ரோவர், 2014 ஆம் ஆண்டு முதல் இந்த மலையின் மீது ஏறி ஆராய்ச்சி செய்து வருகிறது, செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரிகளுக்கு ஊட்டச்சத்து கொடுக்கும் மூலங்களைப் பற்றி அறிந்து கொள்வதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம் ஆகும்.  

Gediz Vallis சேனல் பகுதியில் பாயும் நீர் ஒரு பள்ளம் போன்ற கால்வாயை உருவாக்கியது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள், அந்த நதி அடித்துக் கொண்டு வந்த குப்பைகள் மலைப்பகுதியில் இரண்டு மைல்களுக்கு பாறைகள் மற்றும் வண்டல்களாக படிந்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. ஏன் தற்போது அங்கு நீர் (திரவம்) ஓட்டம் இல்லை என்றும் தற்போதைய நிலப்பரப்பு எவ்வாறு வெளிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வதை நோக்கமாக கொண்டு இந்த் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.