யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் என்பு மாற்று சத்திர சிகிச்சைப் பிரிவை(Bone marrow transplant unit) நிறுவுவதுடன், வைத்தியசாலையின் மருத்துவ சேவையை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு அவசியமான நவீன தொழில்நுட்ப வசதிகளுடனான உபகரணங்களை ( ? ??? ?-??? ) வைத்தியசாலைக்கு வழங்கும் நிகழ்வு நேற்று(18) சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நவீன உபகரணங்களுக்காக சுகாதார அமைச்சினால் 50மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டு யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இவ்வுபகரணங்கள் அறுவை சிகிச்சைகளின் போது எலும்புகளை (ஸ்கேன்) பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
நாட்டின் மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தினால் நிருவகிக்கப்படும் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பை மேலும் ஒழுங்கு முறையாக மற்றும் அதிக வசதிகளுடன் நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை சேவைகளுடன் மேற்கொள்வதன் அடிப்படை நோக்காக மாவட்ட மட்டங்களில் அவ்வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து மற்றும் விரைவாகத் தீர்வு வழங்கி நாட்டு மக்களுக்கு உயர்தரத்திலான முறையான சுகாதார சேவையை வழங்குவதற்கு நடைமுறைப்படுத்தப்படும் விசேட வேலைத்திட்டத்திற்கு ஏற்றதாக சுகாதார அமைச்சர் பிரதான அதிகாரிகள் யாழ்ப்பாணப் போதனா வைத்திய சாலைக்கு இம்மேற்பார்வை விஜயத்தை மேற்கொண்டனர்.
இதன் போது அமைச்சர் மற்றும் அதிகாரிகளினால் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, சாய்சாலை (கிளினிக்), நோயாளர் விடுதி, கண் பிரிவு, சமயலறை, ஆய்வு கூடம், மருந்துக் களஞ்சியம், அறுவை மற்றும் சத்திர சிகிச்சை அறை, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விசேட பிரிவு போன்றவற்றைப் பார்வையிட்டதுடன், இவ்விஜயத்தின் போது வைத்திய சாலை ஊழியர்களுடன் விசேட கலந்துரையாடலிலும் சுகாதார அமைச்சர் ஈடுபட்டதுடன், அவர்களுக்கு அலுவலகக் கடமைகள் மற்றும் ஏனைய சிக்கல்கள் தொடர்பாக கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன:
வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தைத் மையமாக வைத்து ஏனைய மாவட்டங்களில் மக்களுக்கு போதிய மருத்துவ ஆரோக்கிய சேவைகளை வழங்கும் பிரதான வைத்தியசாலையான யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றுக்கு விரைவாகத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து, இம்மாகாணத்தின் மக்களுக்குத் உயர் தரத்திலான, வினைத்திறனான சுகாதார சேவையை வழங்கும் நோக்கிலேயே தான் இந்த விசேட விஜயத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் மேற்கொண்ட விஜயத்தில் விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போது, தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் வைத்தியசாலையில் மேற்கொள்ள வேண்டிய உடனடி அபிவிருத்திகள் தொடர்பாகத் தான் புரிந்து கொண்டதாகவும், விரைவாக அவ்வபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
எதிர்வரும் ஆண்டில் வரவுசெலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பிரிவு மற்றும் கட்ட நிருமாணப் பணிகளை மேற்கொள்வதற்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கித் தருவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
நோய் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக இவ்வைத்தியசாலைக்கு அவசியமான ஆளணி வசதிகள், பயிற்சிகளைப் பெற்று வெளியேறுபவர்களை முடிந்த வரை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட கடமை அதிகாரிக்குத் தான் ஆலோசனை வழங்கியதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி. சத்தியமூர்த்தி, என விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட வைத்தியசாலைப் பணியாளர்கள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.