Santhanam: “உன்னை நினைத்து 2’ சந்தானத்துடன் இணைகிறேனா?” – விக்ரமன் விளக்கம்

‘உன்னை நினைத்து’ பார்ட் -2 படத்தை சந்தானத்தை ஹீரோவாக வைத்து இயக்குநர் விக்ரமன் இயக்கப்போகிறார் என்று தகவல்கள் பரவிவருகின்றன.

கடந்த 2002-ஆம் ஆண்டு சூர்யா- சினேகா- லைலா நடிப்பில் வெளியான ’உன்னை நினைத்து’ படம் வெற்றியைக் குவித்தது. மிக முக்கியமாக, இந்தப் படத்தில் விஜய்தான் ஹீரோவாக ஒப்பந்தமானார். ஷூட்டிங்கெல்லாம் ஆரம்பித்து சில காட்சிகள் நடித்து திடீரென்று விஜய், இப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக சூர்யா ஹீரோவாக நடித்தார்.

unnai ninaiththu

காதலித்து ஏமாற்றிய காதலியாக இருந்தாலும் அந்த காதலி நல்லபடியாக வாழவேண்டும் என்ற நாயகன் நல்ல மனசுக்காகவே படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. நகைச்சுவை காட்சிகளும் ரொம்பவே பேசப்பட்டன. விஜய்க்கு எப்படி ’பூவே உனக்காக’ பேசப்பட்டதோ அதேபோல, சூர்யாவுக்கு உன்னை நினைத்து படம் பேசப்பட்டது. இந்நிலையில் சந்தானம் உன்னை நினைத்து படத்தின் பார்ட் 2 வில் சந்தானம் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. அதேபோல், காமெடி+ காதல் படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் சந்தானத்துக்கு ’உன்னை நினைத்து’ பார்ட் -2 பேசப்படும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த நிலையில், இயக்குநர் விக்ரமனிடம் இதுகுறித்து கேட்டேன்…

“ `உன்னை நினைத்து -2′ படம் எடுத்தா நல்லாயிருக்கும்னு ஸ்கிரிப்ட் எல்லாம் யோசிச்சது உண்மைதான். சந்தானத்தை ஹீரோவா வெச்சு காமெடி கலந்த காதல் கதையா உருவாக்கணும்னு நினைச்சேன். ஆனா, பாதி வரைக்கும்தான் கதை வந்தது. அதனால, அந்த ஸ்கிரிப்ட்டை அப்படியே விட்டுட்டேன். ’உன்னை நினைத்து -2’ படம் எடுக்கிற திட்டத்தையும் கைவிட்டுட்டேன்.

surya

ஆர்.பி.செளத்ரி சாரே ’சூர்ய வம்சம்-2’ எடுக்கச் சொன்னார். நான் எடுக்கலியே. சந்தானத்தை இப்போவரை ‘உன்னை நினைத்து’ படத்துக்காக அப்ரோச்சும் பண்ணல. இப்போதைக்கு எந்த பாரட்-2 படமும் எடுக்கிற ஐடியாவும் இல்ல” என்பவரிடம், “வானத்தைப் போல பார்ட்-2 படம் எப்போன்னு ரசிகர்கள் கேட்டுக்கிட்டே இருக்காங்களே?” என்று கேட்டபோது, இப்போதைக்கு “வானத்தை போல பார்ட் 2 படத்துல நடிக்கிறதுக்கு ஏற்ற நடிகர்களே இல்ல”என்கிறார் புன்னகையோடு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.