இலங்கை நீர் எக்ஸ்போ (Lanka Water Expo) 2024 கண்காட்சி நேற்று(19) ஆரம்பம்

Indian Water Today (pvt) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இலங்கை நீர் எக்ஸ்போ (Lanka Water Expo) 2024 கண்காட்சி கூடத்தினை நீர் வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வானது, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்-BMICH நேற்று (19) நடைபெற்றது.

இக் கண்காட்சியானது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் (19,20,21)  இடம்பெறும். அதேவேளை, 40 க்கும் மேற்பட்ட இலங்கை மற்றும் இந்திய நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கெடுத்துள்ளனர். 

இந்த கண்காட்சியின் நோக்கம்
“நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்திற்கு செயலூக்கமான வலையமைப்பினை தடங்கள் இன்றி வழங்குதல் மற்றும்
உலகளாவிய நீர் நெருக்கடிக்கான தீர்வுகளை அடைவதில் ஒன்றிணைந்து பணியாற்றுதல் என்பதாகும்”. 

மேலும் இலங்கை நீர் மற்றும் கழிவு நீர் துறையில் வணிக வாய்ப்புகளை ஆராய்ந்து அறிவைப் பகிர்வதற்கும் கண்டுபிடிப்பதற்கும் சரியான வணிகத் தளத்தை உருவாக்கவும்,
கடல் சந்தைகள் போன்றவற்றில் இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா திகழ்கின்றது.

ஆகவேதான் இதன்மூலம்
இந்திய மற்றும் இலங்கையின் நீர் மற்றும் சந்தை வாய்ப்புகளுக்கு கூடுதல் நன்மையை வழங்குகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு தீர்வு வழங்குநர்கள் ஒன்றினைந்து
எல்லைகளைத் தாண்டி வணிக மற்றும் வர்த்தக வாய்ப்புகளை உறுவாக்குவதன் மூலம் இலங்கையின் நீண்ட கால மூலோபாய கூட்டணிகள் மற்றும் கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதற்கு இந்த திட்டமானது பங்காற்றுகின்றது.

இந்நிகழ்வில் நீர் வழங்கல் அமைச்சின் திட்டமிடல் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி,  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பிரதி தலைவர் சஞ்ஞீவ விஜயகோன், அமைச்சின் பிரத்தியேக செயலாளர் மொகமட் காதர், சமூக நீர் வழங்கல் பிரதி பாணிப்பாளர் ஆனந்த குமார மாபா, ION Exchange India வின் தலைவர் சாஹில் சாகா, ION Exchange india வின் நிறைவேற்று பிரதி தலைவர் சந்தீப், இலங்கை சோலர் கைத்தொழில் சங்க தலைவர் உபயவர்தன மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.