'உடல் நலக்குறைவு, மன அழுத்தம். ஆனால்…' – ஸ்காட்லாந்தில் படிப்பை முடித்த நடிகை சனுஷா நெகிழ்ச்சி!

‘காசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சனுஷா சந்தோஷ்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த சனுஷா ஹீரோயினாக தமிழ் மற்றும் மலையளப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ‘ரேணிகுண்டா’, ‘பீமா’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ எனப் பல படங்களில் நடித்துள்ளார். சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘கொடிவீரன்’ படத்தில் சசிகுமாரின் தங்கை கேரக்டரில் நடித்திருந்தார்.

சனுஷா சந்தோஷ்

தெலுங்கில் வெளியான ஜெர்சி படத்தில் நடித்தவர் பின்னர் நடிப்பைத் தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டு மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். இதனைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் யுனிவர்சிட்டியில் குளோபல் மெண்டல் ஹெல்த் அண்ட் சொசைட்டி மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் படிப்பை இரண்டு வருடமாகப் படித்து வந்தார். தற்போது படிப்பை முடித்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டமும் பெற்று விட்டார் சனுஷா சந்தோஷ்.

இது குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்து, நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டடிருந்தப் பதிவில் , ‛‛கடந்த இரண்டு வருடங்களாக வீட்டை மிஸ் பண்ணியது, அழுதது, தூக்கம் இல்லா இரவுகள், நிறைய பார்ட் டைம் புல் டைம் வேலைகள், கடினமான பணிகள், உடல் நலக்குறைவு, மன அழுத்தம் என அனைத்தையும் கடந்து இந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதற்கான பலனை இப்போது பெற்றுள்ளேன்.

எனக்கு ஆதரவாக இருந்த என் குடும்பத்தினருக்கு நன்றி. எனக்கு தேவைப்படும் போதெல்லாம் என்னுடன் இருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இந்த வெற்றியை உங்கள் அனைவருக்கும் சமர்பிக்கிறேன். எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் படித்த எம்.எஸ்.சி பட்டதாரி என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.