திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோடு நகர் பீச் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு மகேந்திரன் (வயது 32) என்பவர் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 19 வயது இளம்பெண் பிசியோதெரபி செய்வதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்து உள்ளார். பின்னர் தனி அறையில் வைத்து இளம்பெண்ணுக்கு மகேந்திரன் பிசியோதெரபி செய்தார்.
இதை பயன்படுத்தி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளம்பெண் கோழிக்கோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதை அறிந்த மகேந்திரன் ஆஸ்பத்திரிக்கு பணிக்கு வராமல் தலைமறைவானார். விசாரணையில் இளம்பெண்ணுக்கு பிசியோதெரபி செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அறிந்த சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், பிசியோதெரபி செய்ய வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பிசியோதெரபிஸ்ட் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதையடுத்து மகேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் துறை சார்ந்த விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.