கடற்தொழிலாளர் குடும்பங்களுக்கான அரிசிவழங்கும் நிகழ்வு நேற்று (19) முல்லைத்தீவில் கடற்தொழில் அமைச்சரினால் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 3500 கடற்தொழில் குடும்பங்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவியுடன் குடும்பம் ஒன்றுக்கு தலா 20 கிலோ அரிசி கடற்தொழில் அமைச்சின் ஊடாக வழங்கிவைக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3500 கடற்தொழில் குடும்பங்களுக்கும் இந்த அரிசி வழங்கிவைக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக நாயாறு கிராமத்தில் 350 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கு வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த கடற்தொழில் அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி பணியினையும் தொடக்கிவைத்தார்.
செம்மலை கிராமத்தில் உள்ள பிரதேச சபை வீதி ஒரு கிலோமீற்றர் தூரம் கொண்ட வீதி கடற்தொழில் அமைச்சின் 12 மில்லியன் ரூபா நிதியில் அபிவிருத்தி பணிகளை கடற்தொழில் அமைச்சர் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.