சென்னை: மைக்ரோசாஃப்ட் கிளவுட் செர்வர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை உள்பட முக்கிய நிறுவனங்களின் இணையதளங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதன் காரணமாக சென்னையில் இன்று 2வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டு ள்ளது. இன்றும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதால் விமானத்தை நம்பி வந்த பயணிகள் அவதியடைந்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல்வேறு மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் […]