இந்தியாவின் குறைந்த விலை அட்வென்ச்சர் ரக மாடாலாக வரவுள்ள மிகவும் மேம்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கினைஅடுத்த ஒரு சில மாதங்களுக்குள் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக தற்பொழுது விற்பனையில் உள்ள எக்ஸ்பல்ஸ் 200v மாடலுக்குப் பதிலாக கரீஸ்மா XMR210 பைக்கில் இடம்பெற்றுள்ள 210சிசி லிக்யூடு கூல்டு என்ஜினை பெறக்கூடும்.
Hero Xpulse 210
தற்பொழுதுள்ள மாடலில் உள்ள ஆயில் கூல்டு 199.6ccக்கு பதிலாக 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டிருக்கலாம்.
என்ஜினை தவிர மற்ற மெக்கானிக்கல் அம்சங்களில் சிறிய மேம்பாடுகளை பெற்று டிசைனில் புதுப்பிக்கப்பட்ட பெட்ரோல் டேங்க் மற்றும் முன்புற பேனல்களில் சில மாறுதல்களை பெற்றிருக்கலாம்.
முன்புறத்தில் 90/90-21 M/C 54S டயர் மற்றும் பின்புறத்தில் 120/80-18 M/C 62S டயரும் கொடுக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பில் 37mm டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 10 ஸ்டெப்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் 210 எக்ஸ்பல்ஸ் மட்டுமல்லாமல் 400சிசி எக்ஸ்பல்ஸ் மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளது.