டெல்லி: 2022-23ம் ஆண்டின் மாநில கட்சிகளின் வருவாய் மற்றும் செலவினம் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரும் திமுக கட்சியின் வருவாய் ரூ.214.35 கோடி என்பது தெரிய வந்துள்ளது. அதிக வருவாய் பெரும் மாநில கட்சிகளில், நாட்டிலேயே திமுக 3வது இடத்தை பிடித்துள்ளது. அதிமுக ரூ.20.21 கோடி வருவாய் பெற்றுள்ளது. பதிவுபெற்ற மாநில கட்சிகள் ஆண்டுதோறும் வருவு செலவு கணக்கினை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். […]