Mumbai Rain: இரண்டாவது நாளாக தொடரும் கனமழை… 4 மாடி கட்டடம் இடிந்து பெண் உயிரிழப்பு!

மும்பையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான இடத்தில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநகராட்சி பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாள்களுக்கு மும்பையில் கனமழை பெய்யும் என்று கூறி மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை நீர் தேங்கியதால் நகரின் பல சாலைகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது. கனமழையால் மும்பை கிராண்ட் ரோடு ரயில் நிலையம் அருகில் பழைய நான்கு மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 70 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் 3 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அக்கட்டடத்தில் சிக்கி இருந்த மேலும் 12 பேர் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டனர். அந்தேரி சுரங்கப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை மூடப்பட்டு வாகனங்கள் வேறு வழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டது. மும்பையில் புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படாவிட்டாலும், ஆங்காங்கே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் ரயில்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகிறது மும்பை மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 115 மிமீ அளவுக்கு மழை பெய்தது. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 40 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது

புனே, தானே, நாசிக், பால்கர் உட்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாக்பூர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் குஜராத், கர்நாடகா, தெலங்கானாவிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.