நிசான் X-Trail 2024 பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

ரூ.36 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற நிசானின் 2024 X-Trail எஸ்யூவி மாடலுக்கு ஜூலை 26 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் உடனடியாக டெலிவரி துவங்கப்பட உள்ளது.

CBU முறையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதால் சர்வதேச அளவில் எக்ஸ்-டிரெயில் 5 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் உடன் 4WD, 2WD கிடைத்தாலும், இந்தியாவில் 7 இருக்கைகள் பெற்ற 2WD மட்டும் வெளியிடப்பட உள்ளது.

Nissan X-Trail

மிகவும் பிரம்மாண்டமான தோற்றத்தை கொண்டுள்ள இந்த எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படுத்தவும் அனைத்து விதமான அம்சங்களையும் பெற்றதாக கிடைக்கின்ற நிலையில் இந்திய சந்தைக்கு 7 இருக்கை கொண்டதாக வரவுள்ளது.

வெள்ளை, டயமண்ட் பிளாக் மற்றும் ஷாம்பெயின் சில்வர் என மூன்று நிறங்களை பெற உள்ள நிசான் எக்ஸ்-ட்ரெயில் மாடலின் பரிமாணங்களைப் பொறுத்தவரை, காரின் நீளம் 4,680 மிமீ, அகலம் 1,840 மிமீ மற்றும் உயரம் 1,725 மிமீ, வீல்பேஸ் 2,705 மிமீ பெற்றதாக அமைந்துள்ள எஸ்யூவி 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

163PS மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 12v மைல்டு ஹைபிரிட் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மூன்று சிலிண்டர் என்ஜின் மட்டும் பொருத்தப்பட்டிருக்கும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.

13.7kmpl மைலேஜ் என்று கூறப்படுகின்ற நிலையில் இந்த மாடல், 9.6 வினாடிகளில் 0-100kmph வேகத்தை எட்டும் திறனை கொண்டுள்ளதாக நிசான் உறுதிப்படுத்தியுள்ளது.

x-trail

255/45 R20 டயருடன் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லைட், சில்வர் ரூஃப் ரெயில், ஒருங்கிணைந்த ஸ்பாய்லர், ஷார்க் ஃபின் ஆண்டெனா, பின்புற வைப்பர் மற்றும் வாஷர் கொண்டுள்ளது.

12.3 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கனெக்ட்டிவிட்டி அம்சங்களுடன் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், கீலெஸ் என்ட்ரி மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட், 360 டிகிரி கேமரா உடன் சரவுண்ட் வியூ மாணிட்டர் மற்றும் பேடல் ஷிஃப்டர் உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள நிசான் எக்ஸ்-ட்ரெயில் விலை ரூபாய் 36 லட்சத்தில் துவங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான், ஸ்கோடா கோடியாக் , ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுவதுடன் ஜீப் மெர்டியன் எஸ்யூவிகளை எதிர்கொள்ளும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.