2024 சிறுபோகத்தில் வயல் அறுவடை முடிந்ததன் பின்னர் இபநெல்லே பாசிப்பயறை மூன்றாவது போக நடுப்பகுதியில் உற்பத்தி செய்வதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி ஒரு ஹெக்டயருக்கு 25 கிலோ பாசிப்பயறு விதைகள் வீதம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதுடன் அதற்காக ஒரு விவசாயிக்கு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் 25 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முறை நடுப்போகத்தில் 63,750 ஹெக்டயரில் பாசிப்பயறு உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதன்படி நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் 40,000 ஏக்கருக்கும், 16,250 ஏக்கர்களுக்கு மகாவலி நீர்ப்பாசனம் மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 7,500 ஏக்கர் களுக்கான நீர்ப்பாசனமும் உற்பத்திக்காக வழங்கப்படவுள்ளன.
அவ்வாறே எமது தேவைக்கு நாட்டில் 15,000 மெட்ரிக் தொன் வரை வருடாந்தம் பாசிப்பயறு உற்பத்தி செய்யப்படுவதுடன் 5000 மெட்ரிக் டன் வரை இறக்குமதி செய்யப்படுகின்றது.
தற்போது எமது நாட்டிற்கு வருடாந்தம் 20,000 மெட்ரிக் தொன் பாசிப்பயறு தேவைப்படுகின்றது.
இந்த நடுப்போகத்தில் பாசிப்பயறு உற்பத்தி செய்வதன் ஊடாக இவ்வருடத்தில் நாட்டிற்கு தேவையான பாசிப்பயறைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலைமை ஏற்படுவதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.
அவ்வாரு இபநெல்லே பாசிப்பயறு உற்பத்தியை நடுப்போகத்திற்கு விஸ்தரிப்பதற்காக அவசியமான நிதி ஒதுக்கீட்டை விவசாய நம்பிக்கை நிதியத்திற்கு வழங்குமாறு அமைச்சர் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்திக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் விவசாய திணைக் களத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளதன் படி நாட்டின் பாசிப்பயறு உற்பத்திக்காக அதிகமான சாத்தியப்பாடு உள்ள மாவட்டங்களாக ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அம்பாறை ஆகியவை உள்ளன.
ஏனைய மாவட்டங்களிலும் பாசிப் பயறை உற்பத்தி செய்ய முடியும் ஆயினும் இபநெல்லே பாசிப்பயறு உற்பத்திக்கு பொருத்தமான சாத்தியப்பாடு காணப்படவில்லை என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது