கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகைபுரம் பகுதியில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் நேற்று 20) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு விவசாய தொழில் முனைவோர் கிராம பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றுகையில் :
இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமமாக கண்ணகிபுரம் கிராமம் தெரிவாகியுள்ள நிலையில் கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடல் உழைப்பின் ஊடாக இக் கிராமத்தை ஓர் முன் மாதிரி விவசாய உற்பத்தி கிராமமாக உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இக் கிராமம் ஓர் புதிய யுகமாக மாற்றி உருவாக்க அனைத்து மக்களும் உழைக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் இந்நிகழ்வில் விவசாய முயற்சியாளர்களுக்கான விவசாய உற்பத்தி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனை மற்றும் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கருத்திட்டத்திற்கு அமைவாக இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.