இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்: காசாவில் இதுவரை 39,000-ஐ தாண்டியது உயிரிழப்பு!

டெல் அவில்: தெற்கு காசாவில் கிழக்கு கான் யூனிஸ் மீது இஸ்ரேலிய தாக்குதல் 39 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அதோடு, பெரும்பாலான பாலஸ்தீனர்கள் கிழக்கு கான் யூனிஸில் இருந்து வெளியேறினர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காசாவில் இதுவரையிலான பலி எண்ணிக்கை 39,000-ஐ தாண்டியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று காசா மீதான இஸ்ரேலின் போரில் 39,006 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 89,818 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும், ஆயிரகணக்கான மக்கள் இன்னும் காசாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று கிழக்கு கான் யூனிஸ் மீது இஸ்ரேலின் புதிய தாக்குதலைத் தொடர்ந்து 39 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்றும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஜோர்டானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அய்மன் சஃபாடி இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், “காசா, குழந்தைகளின் கல்லறையாக மட்டும் மாறவில்லை. இது சர்வதேச சட்டத்திற்கான கல்லறையாக மாறியுள்ளது, ஒட்டுமொத்த சர்வதேச ஒழுங்கின் அவமானகரமான கறையாக மாறியுள்ளது. ஒரு போர்க் குற்றம்” என்றும் தெரிவித்துள்ளார். வெஸ்ட் பேங்கில் சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒரு பாலஸ்தீன குழந்தை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் முகமை (UNICEF) தெரிவித்துள்ளது.



கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 143 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், இது முந்தைய ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 250 சதவீதம் அதிகமாகும். அதாவது, “பல ஆண்டுகளாக, கிழக்கு ஜெருசலேம் உட்பட வெஸ்ட் பேங்கில் வசிக்கும் குழந்தைகள் கொடூரமான வன்முறைக்கு ஆளாகியுள்ளனர்” என்று யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.