சேலம்: கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 64,033 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காவிரியின் முக்கிய துணை நதியான கபினியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கர்நாடகாவில் உள்ள கபினி அணை நிரம்பியது. இதையடுத்து, […]