கர்நாடகா: `முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாக கூற கட்டாயப்படுத்தினார்கள்!’ – ED அதிகாரிகள் மீது புகார்

கர்நாடக மாநிலத்தில் மகரிஷி வால்மீகி பழங்குடியின வளர்ச்சி வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சி வாரியத்தில் கணக்காளராக பணியாற்றிய சந்திரசேகரன் கடந்த மே 26-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரிடமிருந்து கிடைத்த கடிதத்தில், வால்மீகி வளர்ச்சி கழகத்தின் நிதியில் (ரூ.187 கோடி ரூபாய்) ஊழல் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நகேந்திரன் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

பாஜக – அமலாக்கத்துறை

இது தொடர்பான விசாரணையில் ஹைதராபாத்தை சேர்ந்த கூட்டுறவு சங்கத்தின் வங்கி கணக்குக்கு, வால்மீகி வளர்ச்சி கழகத்தின் நிதி முறைகேடாக மாற்றப்பட்டதும், பின்னர் அங்கிருந்து பல்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், மாநில மகரிஷி வால்மீகி நிகாம் தலைவருமான பசனகவுடா தாடால் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக இருவரையும் கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநர் கல்லேஷிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூலை 16-ம் தேதி விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப் பிறகு, கல்லேஷ் பெங்களூரின் வில்சன் கார்டன் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அந்தப் புகாரில்,“ஜூலை 16 அன்று அமலாக்கத்துறை அதிகாரிகளான மிட்டல், முரளி கண்ணன் ஆகியோர் என்னிடம் விசாரணை நடத்தினர். அப்போது முரளி கண்ணன் என்னிடம் 17 கேள்விகள் கேட்டார். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விக்கும் உடனடியாக பதிலளித்தேன்.

காவல்துறை

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.நாகேந்திரா, கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநில நிதித் துறைக்கும் தொடர்பிருப்பதாக வாக்குமூலம் அளிக்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். அப்படி வாக்குமூலம் அளிக்காவிட்டால், என்னையும் இந்த வழக்கில் சிக்க வைப்பதாக மிட்டல் மிரட்டினார். அமலாக்கத்துறையின் ஆதரவு கிடைக்க வேண்டுமானால் வாக்குமூலம் அளிக்க வேண்டும் எனவும் கூறினார்கள். எனவே அந்த இரண்டு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” எனப் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில், இரண்டு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.