மலப்புரம்: கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் அச்சிறுவன் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன் பழந்தின்னி வவ்வால்கள் இருக்கும் தங்கள் பகுதியில் உள்ளூர் பழத்தை சாப்பிட்டுள்ளார் என சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது நிபா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து நிபா வைரஸ் பரவல் குறித்து மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று மலப்புரத் தில் மறுஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: நிபா வைரஸ் பெரும் பாலும் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. அந்த சிறுவன் காய்ச்சல் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன் அம்பழங்கா எனப்படும் உள்ளூர் பழத்தை தனது வீட் டுக்கு அருகில் இருந்து சாப்பிட்டதாக சிறுவனின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
பழந்தின்னி வவ்வால்: அந்தப் பகுதியில் பழந் தின்னி வவ்வால்கள் இருப்பதை ஏற்கெனவே உறுதி செய்துள்ளோம். இதுவே நோய்த்தொற்றுக்கு ஆதாரமாக இருக்கலாம் என நம்புகிறோம். என்றாலும் இதை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறது. புனேவை சேர்ந்த தேசிய வைராலஜி நிறுவன நிபுணர்கள் குழு மலப்புரம் வந்து இப்பகுதியில் உள்ள பழந்தின்னி வவ்வால்களை ஆய்வு செய்ய உள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் தொடர்பான முந்தைய சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர்களிடம் காணப்பட்ட வைரஸ் திரிபு, பழந்தின்னிவவ்வால்களின் உடலில் காணப்படும் திரிபுக்கு ஒத்ததாக இருப்பதை காண முடிந்தது. பழங்களில் வைரஸ் உள்ளதா என்று கண்டறியும் முயற்சிகள் ஐசிஎம்ஆர் உதவியுடன் நடந்து வருகின்றன. இவ்வாறு அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.