கைத்தறி நெசவுக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற பெண்கள் மற்றும் இளைஞர் சமூகத்தை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கைத்தறி நெசவுக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதிலுள்ள சிரமங்கள், தொழில்முயற்சித் திறன்கள் குறைவடைதல், சுற்றாடல் நேயம்மிக்கதும் போதியளவு உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை, சந்தைக் கேள்விக்கு ஏற்புடைய வகையிலான தரப்பண்பான உற்பத்தியின்மை, மற்றும் போதியளவு சந்தைப்படுத்தல் வசதிகளின்மை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணளும் முகமாக இது அமைந்துள்ளது.
குறித்த கருத்திட்ட முன்மொழிவின் மூலம் அடையாளங் காணப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை, நெசவுத் திணைக்களம், இலங்கை சலுசல நிறுவனம் மற்றும் தேசிய அலங்கரிப்பு நிலையம் போன்ற நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறுப்பிடத்தக்கது.
இது தொடர்பாக 22.07.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு:
01. கைத்தறி நெசவுக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற பெண்கள் மற்றும் இளைஞர் சமூகத்தை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
கைத்தறி நெசவுக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற பெண்கள் மற்றும் இளைஞர் சமூகத்தை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கைத்தொழில் அமைச்சுக்கு 300 மில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கைத்தறி நெசவுக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதிலுள்ள சிரமங்கள், தொழில்முயற்சித் திறன்கள் குறைவடைதல், சுற்றாடல் நேயம்மிக்கதும் போதியளவு உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை, சந்தைக் கேள்விக்கு ஏற்புடைய வகையிலான தரப்பண்பான உற்பத்தியின்மை, மற்றும் போதியளவு சந்தைப்படுத்தல் வசதிகளின்மை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஒருங்கிணைந்த கருத்திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக தேசிய பெறுகைகள் திணைக்களத்தின் விதந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கிணங்க, குறித்த கருத்திட்ட முன்மொழிவின் மூலம் அடையாளங் காணப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை, நெசவுத் திணைக்களம், இலங்கை சலுசல நிறுவனம் மற்றும் தேசிய அலங்கரிப்பு நிலையம் போன்ற நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.