பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் ஆன்ரோடு விலை பட்டியல்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மோட்டார்சைக்கிளின் என்ஜின் விபரம் உண்மையான மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃப்ரீடம் 125 பைக்கில் 2 கிலோ கொள்ளளவு பெற்ற சிஎன்ஜி சிலிண்டர் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Bajaj Freedom 125 CNG True Mileage

ஃப்ரீடம் 125 மாடலில் பொருத்தப்பட்டுள்ள 124.8cc என்ஜின் CNG எரிபொருளில் 8,000 rpm-ல் 9.5 hp பவர் மற்றும் 5,000 rpm-ல் 9.7 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேகத்தில் கியர்பாக்ஸ்  கொடுக்கப்பட்டிருக்கின்றது.

2 லிட்டர் பெட்ரோல் நிரப்பும் வகையிலான டேங்க் கொடுக்கப்பட்டு மைலேஜ் லிட்டருக்கு 65கிமீ என மொத்தமாக 130கிமீ வழங்கவும் மற்றும் 1 கிலோ சிஎன்ஜி எரிபொருள் 100கிமீ என 2 கிலோ சிஎன்ஜி சிலிண்டருக்கு 200கிமீ என உறுதிப்படுத்தப்பட்டு, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இணைந்து தோராயமாக 330 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.

உண்மையான நிகழ்நேரத்தில் ஃப்ரீடம் 125 பைக்கினை பெட்ரோலில் இயக்கினால் லிட்டருக்கு 55 கிமீ முதல் 57 கிமீ வரை கிடைக்கின்றது. சிஎன்ஜி எரிபொருளில் இயக்கினால் பைக் மைலேஜ் ஒரு கிலோவுக்கு 85 கிமீ முதல் 88 கிமீ வரை கிடைக்கின்றது என ஒட்டுமொத்தமாக 280 கிமீ முதல் 290 கிமீ  வரை கிடைக்கலாம்.

சிஎன்ஜி எரிபொருள் 1 கிலோ – ₹ 87.50

பெட்ரோல் 1 லிட்டர் – ₹ 100.86

(சென்னை விலை தேதியின்படி 23/07/2024)

2 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.201.72 மற்றும் 2 கிலோ சிஎன்ஜி எரிபொருள் ரூ. 175 என மொத்தமாக ரூ. 377 செலவு செய்தால் 290 கிமீ பயணிக்கலாம். மற்ற பெட்ரோல் 125சிசி பைக்குகளுக்கு ரூ.377 செலவு செய்து பெட்ரோல் நிரப்பினால் சராசரியாக லிட்டருக்கு 56 கிமீ முதல் 58 கிமீ வரை கிடைத்தாலும் 210 கிமீ கிடைக்கலாம்.

எனவே, சாதாரன பெட்ரோல் மாடலுக்கு செலவு செய்கின்ற அதே தொகையில் 80-90 கிமீ வரை கூடுதலான மைலேஜை ஃப்ரீடம் 125 சிஎன்ஜி வெளிப்படுத்துகின்றது.

மேலும் படிக்க – Freedom 125 சிஎன்ஜி வேரியண்ட் விபரம்

Bajaj Freedom 125 CNG on-road price

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ.1.13 லட்சம் முதல் ரூ. 1.31 லட்சம் வரை அமைந்துள்ளது.

FREEDOM 125 CNG EX-SHOWROOM ON-ROAD PRICE
NG04 Drum ₹.95,000 ₹.1,13,651
NG04 Drum LED ₹1,05,000 ₹.1,24,781
NG04 Disc LED ₹.1,10,000 ₹.1,30,763

கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆன்-ரோடு விலையில் எவ்விதமான கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படவில்லை. விலை டீலர்கள் மற்றும் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.