க்ரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்ற ஆறு மற்றும் ஏழு இருக்கைகளை கொண்ட அல்கசார் எஸ்யூவி காரின் இறுதி கட்ட சோதனை ஓட்ட படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அல்காசர் மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் உள்ள எம்ஜி ஹெக்டர் பிளஸ், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.
Hyundai Alcazar 2024
என்ஜின் ஆப்ஷனில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தற்பொழுது உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் என இரண்டு விதமான ஆப்ஷனில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என இரண்டு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது.
அல்கசாரின் முன்புற தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாறுதல்கள் மற்றும் க்ரெட்டா காரில் உள்ளதை போன்று எல்இடி லைட் பார் போன்றவற்றைப் பெற்று புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட் மற்றும் பம்பர் அமைப்பு கிரில் அமைப்பில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பக்கவாட்டில் உள்ள பேனல்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லை ஆனால் புதுப்பிக்கப்பட்ட புதிய அளவில் பெற்றுள்ளது மற்றும் பின்புறத்திலும் சிறிய அளவிலான பம்பர் மாற்றங்கள் மட்டும் பெற்று இருக்கின்றது.
இன்டீரியர் அம்சங்களை பொருத்தவரை ஏற்கனவே சந்தையில் உள்ள கிரெட்டா காரில் உள்ளதைப் போன்ற மிக அகலமான 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்டர் பெற்று இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகளை பெற்றிருக்கும்.
வரும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாத துவக்க வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த மாடலானது பல்வேறு ஸ்டைலிஷ் மாற்றங்களை க்ரெட்டா போல பல வசதிகள் இருக்கும் கூடுதலான வசதிகளுடன் லெவல் 2 ADAS பாதுகாப்புத் தொகுப்பினை பெறலாம்.
image-instagram/aditya_patnaik_/