Budget 2024: மின்சார வாகனங்கள் விலை குறையுமா? சாமனிய மக்களின் எதிர்பார்ப்புகள்…

Demands For Automobile Sector : 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டு மழைக்கால கூட்டத் தொடர், பட்ஜெட் கூட்டத் தொடராக நடைபெறும் நிலையில், 2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

பல்வேறு நாடுகளும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதும், தொடர்ந்து மூன்றாவது முறையாக 7 சதவீதத்துக்கும் அதிக வளர்ச்சி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதார ஆய்வறிக்கையின்படி, வரி வருமானம் 19.1 சதவீதம் அதிகரிப்பு என்பதும், செலவு பற்றாக்குறை 0.7 சதவீதம் என்பதும் சாமானிய மக்களுக்கு வரிச்சுமையை அதிகப்படுத்தாது என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. 

ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை பெறும் முதல் மத்திய அமைச்சர் ஒரு பெண் என்பதும், அதிலும் அவர் தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட்டில் ஆட்டோ துறையினரின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா என்ற கேள்விக்கான பதில் இந்த கட்டுரை.

2024 பட்ஜெட்டில் வாகனத் துறை எதிர்பார்ப்புகள்
ஆட்டோமொபைல் துறை, குறிப்பாக மின்சார வாகன (EV) துறை, வரவிருக்கும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்றால், அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு, தனிநபர் மற்றும் வணிக போக்குவரத்துக்கு மின்சார வாகனங்களை வேகமாக ஏற்றுக்கொள்வதற்கான சாலை வரைபடத்தை அமைக்கும் விதமாக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம். 

இந்தியப் பொருளாதாரம் புதிய மற்றும் நிலையான தொழில்நுட்பத் தயாரிப்புகளை நோக்கி நகரும் நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், நிலையான வளர்ச்சிக்கான கொள்கை கட்டமைப்பு கோடிட்டுகாட்டப்படலாம். 

இந்திய சந்தைக்கான உலகளாவிய சிறந்த தொழில்நுட்ப சலுகைகள் என்பது, தனிநபர்கள் மின்சார வாகனத்தை நோக்கி செல்வதற்கு  உத்வேகத்தை வழங்கும். எனவே, வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தைக்கு மிகவும் பொருத்தமான மேம்பட்ட நிலையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த பட்ஜெட் ஊக்குவிக்க வேண்டும் என ஆட்டோமொபைல் துறையினர் எதிர்பார்க்கின்றன.

வாகனங்கள் மீதான தேய்மானம்
வருமான வரி செலுத்தும் தனிநபர்களுக்கு வாகனங்கள் மீதான தேய்மானத்தின் பலன்கள் கிடைத்தால், வாகனங்கள் வாங்குவது என்பது, வாங்கிய அடுத்த நாளே அதன் மதிப்பு குறைந்துவிடும் என்பது போன்ற மனத்தடைகளை அகற்றலாம். தேய்மானத்தைக் கணக்கிட அனுமதிப்பது வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், வாகனங்கள் விற்பனையையும் அதிகரிக்கும்.  

வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை (Limited Liability Partnership (LLP)) நிறுவனங்கள், தனி நபர் நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைக்கப்படலாம். 400 கோடி ரூபாய் வரையிலான விற்றுமுதல் கொண்ட தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டு, 25% ஆக உள்ள நிலையில், இந்த நன்மையை அனைத்து எல்எல்பிகளுக்கும், தனியுரிம மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என்று ஆட்டோமொபைல் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

ஆட்டோமொபைல் துறையில், புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முன்முயற்சிகள் மற்றும் மானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  FAME 3 ஐச் செயல்படுத்தினால், இந்தியாவில் மின்சார வாகன விற்பனை அதிகரிக்கலாம்.  FAME மானியத்தை விரிவாக்குவது நிறுவனங்களின் நிலையை மேம்படுத்துவத உதவியாக இருக்கும் என்ற கோரிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிசீலித்தாரா என்பதை தெரிந்துக் கொள்ள பட்ஜெட்டை ஆர்வமாக தொழில்துறையினர் எதிர்நோக்கியுள்ளனர். 

வாகனங்களை ஏற்றுமதி செய்யும்போது, ​​’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் பலன்கள் அதிகரிக்கப்படலாம். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக நிதியமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிடலாம். உள்ளூர் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பின் தொழில்நுட்ப அளவுகோலை உயர்த்து அறிவிப்பும் வெளியாகலாம்.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள், நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய சந்தை விரிவாக்கம் என ஆட்டோமொபைல் துறையினர் மத்திய அரசிடம் இருந்து பல விஷயங்களை எதிர்பார்க்கின்றானர். 

மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரிக்க, அவசியம். FAME-III போன்ற கொள்கைச் சீர்திருத்தங்கள் மற்றும் முக்கியமான மின்சார வாகன பிரிவுகளுக்கான சலுகைகள் போன்றவை ஆட்டோமொபைல் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதால், இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம். 

முக்கியமாக, நெறிப்படுத்தப்பட்ட உரிம விதிமுறைகள், ஒழுங்குமுறை தரநிலைப்படுத்தல் மற்றும் வரிகளை குறைப்பது போன்றவை, ஆட்டோமொபைல் துறையினருக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். மின்சார வாகனங்களுக்கும், உற்பத்தி நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் மானியங்களை அதிகரிப்பது, ஊக்கத்தொகைகள் வழங்குவது, வரிச் சலுகைகளை அதிகரிப்பது வாகன உதிரிபாகங்கள் மீதான கட்டணங்களை குறைப்பது என ஆட்டோமொபைல் துறையினரின் எதிர்பார்ப்புகளை மத்திய நிதியமைச்சர், தனது ஏழாவது பட்ஜெட்டில் அறிவிப்பாரா என்பதை எதிர்பார்த்து நாடு காத்துக் கொண்டிருக்கிறது. 

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்த எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் முழுமையான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அரசாங்க தளங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.