"என் ஒர்க் பிடிச்சா சப்போர்ட் பண்ணுங்க!"- இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான்

‘ரோஜா’ படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானைப்போல அவரது மகன் அமீன், பாடகராக கலக்கி வருகிறார். இந்நிலையில் அவரது மகள் கதீஜா ஹலிதா ஷமீ்ம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மின்மினி’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரைத்துறையில் அறிமுகமாகிறார். ஹலிதா ஷமீ்ம் ‘பூவரசம் பீப்பீ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர். ‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’ என அடுத்தடுத்த படைப்புகளின் வழியே கவனம் ஈர்த்தவர்.

கதீஜா ரகுமான், ஹலிதா ஹமீம்

தற்போது இவர் ‘மின்மினி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான் பேசும்போது, “இதுபோன்ற ஒரு தருணம் நடக்கும் என்று நம்பவில்லை. இயக்குநர் ஹலிதா ஷமீம் என்னிடம் 2022-லேயே இப்படத்திற்கு இசையமைத்துத் தரச் சொல்லி கேட்டார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

அப்போது நான் இசையமைக்கும் அளவிற்கு தயாராகவில்லை. சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்தபோது இந்த படத்திற்கு நீங்கள்தான் இசையமைத்துத் தர வேண்டும் என்று கேட்டார். என்னுடன் இருபவர்கள் நாங்கள் உனக்கு இருக்கிறோம் தைரியமாக இதனை செய் என்றார்கள். அதன் பிறகு நானும் ஒப்புக்கொண்டேன். ஆனால் திறமையான மற்ற இசையமைப்பாளர்கள் இருக்கும்போது இவரை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று நிறைய பேர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.

கதீஜா ரகுமான்

அதனைக் கேட்டபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இருப்பினும் எனது பணியை சிறப்பாக முடித்து விட்டேன். என்னுடன் பணியாற்றியவர்களுக்கும், ஆதரவு தெரிவித்தவர்களுக்கும் நன்றி. உங்களுக்கு என்னுடைய ஒர்க் பிடிதிருந்தால் ஆதரவு கொடுங்கள். குறை எதுவும் இருந்தால் சொல்லுங்கள். ஆனால் வருத்தப்படும் அளவிற்கு கடினமாக எதையும் சொல்லி விடாதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.