ஜியோ ரீசார்ஜ் பிளான் 155 ரூபாயிலிருந்து 189ஆக உயர்ந்தாலும் இதுதான் ஏர்டெல்லை விட பெஸ்ட்!

ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்கள் பல இருந்தாலும் 155 ரூபாய் திட்டம் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருந்தது. இதைத் தவிர வரம்பற்ற டேட்டா மற்றும் இலவச அழைப்பு ஆகியவையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. நாட்டின் தொலைத்தொடர்பு துறையில் ஜிய நம்பர் 1 ஆக எடுத்துக் கொண்ட காலம் குறைவு தான் என்பதற்கு அடையாளம், தற்போது 13 கோடி பேர் ஜியோவின் 5ஜியை பயன்படுத்து ஆகும்.

இருந்தாலும், அண்மையில் தனது பல திட்டங்களில் விலையை ஜியோ உயர்த்தியது. அதில், 155 ரூபாய் திட்டம் 189 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தின் விலை அதிகரித்தாலும், டேட்டா, அழைப்பு நிமிடங்கள் போன்றவற்றின் அடிப்படையில் ஏர்டெல்லுடன் ஒப்பிடும்போது, ​​189 ரூபாய் திட்டம் சிறந்ததாக இருக்கிறது.

ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான்

ரிலையன்ஸ் ஜியோ தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை ஜூலை 3, முதல் 13 முதல் 25% வரை அதிகரித்த பிறகு, நிறுவனத்தின் திட்டங்களிலேயே மலிவான ஜியோ ரீசார்ஜ் திட்டம் என்பது ரூ.189 என்று மாறிவிட்டது. விலையேற்றத்திற்கு முன்னதாக இதன் விலை ரூ.155 ஆக இருந்தது. 

ரிலையன்ஸ் ஜியோ ரூ 189 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.189 ஆக உயர்ந்த நிலையில், இதுவே நிறுவனத்தின் மலிவான திட்டமாக உள்ளது. 2ஜிபி டேட்டா மற்றும் எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் என்ற அழைப்பு சுதந்திரத்துடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் திட்டம் இது.

இந்தத் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். 25% வரை விலை அதிகரித்திருந்தாலும், பார்தி ஏர்டெல்லின் மலிவான திட்டத்தை விட முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டம் மலிவானது என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனமும்ம் ஜூலை 3 முதல் ரீசார்ஜ் கட்டணங்களை மாற்றியமைத்ததால், அதன் மலிவு விலைத் திட்டம் ரூ. 199 ஆனது.

ரூ.349 திட்டம் 

ஜியோ, இந்த மாதத் தொடக்கத்தில் சில மாறுதல்களை செய்தபோது, ரூ.349 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் குறித்து பலருக்கு குழப்பம் ஏற்பட்டது. அதாவது, ஜியோ இந்த திட்டத்தின் செல்லுபடி காலத்தை 28 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்த்தியுள்ளதாக சிலர் புரிந்துக் கொண்டனர். ஆனால், My Jio ஆப் மற்றும் ஜியோ இணையதளம் இரண்டின் படி, செல்லுபடியாகும் காலம் இன்னும் 28 நாட்கள் என்பதே நீடிக்கிறது என்பது தெளிவாகியுள்ளது.  

ரூ.349 திட்டத்தின் பலன்கள்

ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய வசதிகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஜியோவின் ரூ.349 திட்டம் ஆகும். ஜியோவின் வரம்பற்ற 5G சேவையைப் பயன்படுத்துவதற்கான மலிவான திட்டம் இது தான். விலை உயர்வுக்கு முன்னதாக, அதாவது ஜூலை 3ம் தேதிக்கு முன்னர் ஜியோவின் ரூ.239 திட்டத்திலும் வரம்பற்ற 5G கிடைத்துவந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டணங்களின் விலை அதிகரிப்புக்குப் பிறகு, ரூ.239 திட்டத்தின் விலை அதிகரிக்கப்பட்டதுடன், 5G வரம்பற்ற தன்மையையும் நீக்கிவிட்டார்கள். தற்போது நாளொன்றுக்கு 2ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டாவை வழங்கும் திட்டங்களுக்கு மட்டுமே வரம்பற்ற 5ஜி நன்மைகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.