ஆகஸ்ட் 7ஆம் தேதி வரவுள்ள டாடா மோட்டார்சின் கர்வ்.இவி கூபே ஸ்டைல் எலெக்ட்ரிக் காரில் 40.5Kwh மற்றும் 55Kwh இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் பெற வாய்ப்புள்ளது. குறைந்த ரேஞ்ச் வெளிப்படுத்தக் கூடிய 40.5 kWh பேட்டரி ஏற்கனவே சந்தையில் உள்ள பிரபலமான நெக்ஸான்.இவி காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட உள்ள டாப் வேரியண்டில் 55Kwh பேட்டரியும் பெற உள்ளது. இந்த பேட்டரி அடுத்த ஆண்டு வரவுள்ள ஹாரியர்.இவி காரில் கூட பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது
Tata Curvv.ev Battery and Range
டாடா கர்வ்.ev காரில் புதிய 55kWh பேட்டரி பெற்று முழுமையாக சிங்கிள் சார்ஜில் 550Km வரை வெளிப்படுத்தும். இருப்பினும், குறைந்த விலை 40.5kWh பேட்டரியின் ARAI சான்றிதழ் படி 465km ரேஞ்ச் வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்புற ஆக்ஸ்லில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் வெளிப்படுத்தக் கூடிய பவர் மற்றும் டார்க் தொடர்பான எந்த விபரங்களும் தற்பொழுது வெளியாகவில்லை.
முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர், 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகளை கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.
புதிய கர்வ் ICE மாடல் 125hp பவர், 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. மேலும் நெக்ஸானிலிருந்து 115 hp, 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சினையும் பெறக்கூடும்.