2024 ஆம் ஆண்டிற்கான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய Xtreme 160R 4V மாடல் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் பேனிக் பிரேக் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் பிரவுன் நிறம் மட்டுமல்லாமல் பல்வேறு சிறப்பம்சங்கள் கூடுதலான வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது அவற்றின் விபரங்கள் தொடர்ந்து பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
Hero Xtreme 160R 4V 2024
எக்ஸ்ட்ரீம் 160R 4V 2024 மாடலில் பேனிக் பிரேக் அலர்ட்(Panic Brake Alert) அவசரமாக பிரேக்கினை இயக்கும் பொழுது பிரேக் லைட், இண்டிகேட்டர் வாயிலாக பின்னால் வருபவர்களுக்கும் அவசரகால பிரேக் என்பதை உனரரும் வகையிலான அமைப்பினை இந்த பிரிவில் முதன்முறையாக ஹீரோ கொண்டு வந்துள்ளது.
டிராக் டைமர் (Drag Timer) என்ற பெயரில் ஆக்சிலிரேஷனை அறிவதற்காக D1 மோடில், 0-60 km/h) மற்றும் லேப் டைம் நேரம் அடுத்து, D2 மோடில், quarter mile timing ஆகியவற்றை அறிவதற்கும், உங்கள் வேகமான நேரத்தை பேக்கப் எடுக்கவும் அனுமதிக்கின்றது.
இதை தவிர புதுப்பிக்கப்பட்ட டையில் லைட் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் கிளஸ்டர் பெறுகின்றது.
163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 16.9 hp பவர் மற்றும் 6500rpm-ல் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
இப்பொழுது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் 276 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 220 மிமீ டிஸ்க் உள்ளது. ட்யூபெலெஸ் டயர் இடம்பெற்று முன்பக்கத்தில் 100/80-17 மற்றும் 130/80-17 பின்பக்கத்தில் உள்ளது.
Xtreme 160R 4V STD – ₹ 1,27,300
Xtreme 160R 4V connected – ₹ 1,32,800
Xtreme 160R 4V Pro – ₹ 1,36,500
Xtreme 160R 4V Pro Dual Channel ABS – ₹ 1,38,500
(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)