Tech Tips in Tamil: ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. மொபைல் என்பது தொலைதொடர்பு சாதனம் மட்டுமல்ல, பல அன்றாடப் பணிகளுக்கும் இது உதவுகிறது. ஆன்லைனில் பணம் செலுத்துவது முதல் பொழுதுபோக்கு மற்றும் கல்வி வரை எல்லா இடங்களிலும் ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாததாகிவிட்டது. ஸ்மார்ட்போன் இல்லாமல் சில மணி நேரம் என்ன, சில நிமிடங்கள் கூட செலவிட முடியாது.
ஸ்மார்போனில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று மெதுவாக சார்ஜ் ஆவது. மொபைல் இல்லாமல் வாழ்க்கை இல்லை என ஆகி விட்ட நிலையில், சில நேரங்களில் மெதுவாக சார்ஜ் ஆவதால் அல்லது சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், மிகப் பெரிய பிரச்சனை கூட ஏற்படலாம்.
உங்கள் ஸ்மார்ட்போனின் மெதுவாக சார்ஜ் ஆகிறது, அதாவது சார்ஜ் ஆக அதிக நேரம் ஆகிறது என்றால், செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்கள் உங்கள் ஃபோனை வேகமாக சார்ஜ் செய்ய உதவுவதோடு, மட்டுமல்லாமல், பல மணிநேர பேட்டரி பேக்அப்பும் சிறப்பாக இருக்கும்
1. உங்கள் ஸ்மார்ட்போன் மெதுவாக சார்ஜ் செய்தால், அதன் சார்ஜிங் போர்ட்டில் அழுக்கு படிந்திருக்கிறதா என்பதை சோதித்து பார்க்கவும். உங்கள் போனின் சார்ஜிங் போர்ட்டை ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். எனினும் இதனை செய்யும் போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
2. டூத் பிக்கின் உதவியுடன் உங்கள் போனின் சார்ஜிங் போர்ட்டை சுத்தம் செய்யலாம். டூத் பிக்ஸை பருத்தியினால் சுற்றி மெதுவாக சுத்தம் செய்யவும்.
3. மொபைலை சார்ஜிங் போர்ட்டில் சில சொட்டு ஆல்கஹாலையும் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். இருப்பினும், அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு, நீங்கள் நிச்சயமாக நிபுணர் ஆலோசனையைப் பெற வேண்டும். இதைச் செய்யும் முதலில் ஸ்மார்ட்போனை ஆஃப் செய்யவும்.
4. உங்கள் ஃபோன் மிக மெதுவாக சார்ஜ் செய்தால், அதை சார்ஜ் செய்யும் போது அதை ஆஃப் செய்யவும். இதில் நிறைய வித்தியாசத்தை நீங்கள் காணலாம்.
5. ஃபோனை சார்ஜ் செய்வதற்கு முன், போனில் இயங்கும் அனைத்து அப்ளிகேஷன்களை முழுவதுமாக மூடவும். பின்புலத்தில் இயங்கும் செயலிகள் சார்ஜ் செய்யும் போது பேட்டரியை சாப்பிட்டுக் கொண்டே இருப்பதால், சார்ஜ் ஆக அதிக நேரம் எடுக்கும்.
6. மொபைலை வேகமாக சார்ஜ் செய்ய, எப்போதும் அசல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்தவும். பல நேரங்களில் ஸ்மார்ட்போன்கள் மற்ற மூன்றாம் தரப்பு சார்ஜர்களை பயன்படுத்தும் போது நன்றாக வேலை செய்யாது.
7. மொபைலை வேகமாக சார்ஜ் செய்ய, அதிக பேட்டரியைப் பயன்படுத்தும் ஆப்ஸை ஆஃப் செய்யலாம் அல்லது முடக்கலாம். இதுவும் பலனளிக்கும்.