மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற செடான் ரக 2024 டிசையர் மாடல் ஆகஸ்ட் மாதம் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் புதிய டிசையரை பற்றி பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் ஸ்விஃப்ட் காரில் இருந்து என்னென்ன வசதிகள் பெறப்போகின்றது, கூடுதலாக என்ன வசதிகள் இடம் பெறலாம் போன்றவற்றை எல்லாம் தொடர்ந்து இப்பொழுது நாம் பார்க்கலாம்.
2024 Maruti Suzuki Dzire
முந்தைய நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜினுக்கு பதிலாக தற்பொழுது மூன்று சிலிண்டர் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் Z சீரியஸ் இடம் பெற உள்ளது. Z12E 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 82 hp மற்றும் 112 என்எம் டார்க் வெளிப்படுத்தும். டிசையருக்கும் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படும்.
ஸ்விஃப்ட் மாடலில் இருந்து வேறுபடுத்தி வித்தியாசமான கிரில் மற்றும் டாப் வேரியண்டுகளில் எல்இடி புராஜெக்ட்ர் ஹெட்லைட் பெற்று ஃபோக் விளக்கு அறையில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.
பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் டிசைன் கொண்டிருக்கும். பின்புறத்தில் உள்ள பம்பர் மற்றும் டெயில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கலாம்.
இன்டீரியர் வசதிகளில் டாப் வேரியண்டில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 4.2 MID டிஜிட்டல் கிளஸ்ட்டர், ஃபுளோட்டிங் 9 அங்குல ஸ்மார்ட்புரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சுசூகி கனெக்ட் , மேம்பட்ட ஏசி வசதி, மற்றும் டேஸ்போர்டின் நிறங்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம்.
பல்வேறு ஸ்மார்ட்போன் சார்ந்த இணைப்புகளுடன் வயர்லெஸ் சார்ஜிங் பேட், ஹெட்அப் டிஸ்பிளே மூலம் வேகம் , நேவிகேஷன் உள்ளிட்ட விபரங்களை திரையில் காணலாம்.
ஹூண்டாய் ஆரா, ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டிகோருக்கு எதிராக மாருதி சுசூகி டிசையர் அமைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2024ல் விற்பனைக்கு வரக்கூடும்.