`2026 சட்டப்பேரவைத் தேர்தல்; தேனியில் போட்டியிடுகிறேனா?' – டி.டி.வி.தினகரன் விளக்கம்!

தேனி பழனிசெட்டிபட்டியில் அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், “2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பணியாற்றுவதற்கான ஆலோசனைகள் செய்யப்பட்டன. குறிப்பாக கிளை அமைப்புகள், பூத் ஏஜென்ட்கள், ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் எப்படி தேர்தல் வேலைகள் பார்க்க வேண்டும் என்பது தொடர்பாக நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தோம்.

ஆலோசனைக் கூட்டம்

தேனி பிடித்த ஊர் என்பதால் இங்கு குத்தகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறேன். அதனால் இங்கு ஆலோசனை கூட்டம் நடத்தினோம். ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, போடியில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல் தவறானது. எங்கு போட்டியிடுவது என்ற முடிவை எடுக்கவில்லை. தேனி தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் பெற்றோம். பணநாயகத்தை ஜனநாயகத்தால் வெல்ல முடியவில்லை. இனிவரும் தேர்தலில் எங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பாஜக, அதிமுக-வை அழிக்கப்பார்க்கிறது என்பதெல்லாம் பொய். அம்மாவின் உண்மை தொண்டர்கள் என் பின்னே அணி திரள்வார்கள் என்றுதான் அண்ணாமலை கூறினார். எடப்பாடி பழனிசாமி என்ற சுயநலவாதி, பதவி வெறியர், துரோக சிந்தனை கொண்டவர்தான் அதிமுக ஒன்றிணைய தடைக்கல்லாக இருக்கிறார்.

ஆலோசனைக் கூட்டம்

அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற ஆசையில் சசிகலா சுற்றுப்பயணம் செய்கிறார்கள். விரைவில் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.