AI மூலம் ஊழியர்களை கண்காணிக்கும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம்!- ஜப்பானில் சுவாரஸ்யம்

ஜப்பான் நாட்டில் தங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஊழியர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் ஏஐ உதவியை நாடியுள்ளது ஒரு நிறுவனம். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

2022-ன் இறுதியில் ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த பேச்சு உலக அளவில் வைரல் ஆனது. அதுவரை டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும் மக்களிடையே ஏஐ இருந்தாலும் அது அதிக அளவில் கவனம் பெறாமல் இருந்தது என்று சொல்லலாம். ஓபன் ஏஐ நிறுவனத்தின் ‘சாட்-ஜிபிடி’ வரவு அதனை அப்படியே மாற்றியது.

இந்த ஜெனரேட்டிவ் ஏஐ பாட் டிஜிட்டல் பயனர்களின் அதீத வரவேற்பை பெற்றது. டெக்ஸ்ட், படம் போன்றவற்றை பயனர்கள் எளிதில் இதில் பெறலாம். கட்டுரை, கணினி புரோகிராமிங் என அனைத்தையும் இந்த பாட் எழுதி தரும். பாட்டிகள் போல கதையும் சொல்லும். நாம் ப்ராம்ப்ட் செய்யும் படத்தை உருவாக்கி கொடுக்கும் வல்லமையும் இதற்கு உள்ளது.



ஓபன் ஏஐ நிறுவனத்தை தொடர்ந்து அப்படியே கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் என அனைத்தும் இந்த ஜெனரேட்டிவ் ஏஐ பாட் கோதாவில் இறங்கின. அதன் விளைவாக இப்போது நமது செல்போனில், கணினியில், பயன்படுத்தும் செயலிகளில் என அனைத்து இடத்திலும் இடம் பிடித்துவிட்டது. அதற்கு சிறந்த உதாரணம் மெட்டா ஏஐ மற்றும் மைக்ரோசாப்ட் கோ-பைலட்.

‘நீ அறியாதது எதுவும் உண்டா?’, ‘எப்போது என்னுடன் தமிழில் பேசுவாய்?’ என பயனர்களை வேடிக்கையாக கேள்வி கேட்க செய்யும் அளவுக்கு இதன் அக்சஸ் உள்ளது. அந்த அளவுக்கு ஜெனரேட்டிவ் ஏஐ நம்முடன் இணைந்து விட்டது. இத்தகைய சூழலில் தான் ஜப்பான் நாட்டில் சூப்பர் மார்க்கெட் செயின் பிசினஸில் ஈடுபட்டு வரும் AEON என்ற நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தை தங்களது வணிகம் சார்ந்து பயன்படுத்துகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் தங்களது ஊழியர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை அந்நிறுவனம் கண்காணிக்கிறது.

Mr.Smile: இதற்காக ஜப்பான் நாட்டின் இன்ஸ்டா விஆர் என்ற டெக் நிறுவனம் வடிவமைத்த ‘Mr.Smile’ என்ற ஏஐ சிஸ்டத்தை அந்நிறுவனம் பயன்படுத்துகிறது. உலக அளவில் இப்படி முயற்சிக்கு முதல் நிறுவனமாகவும் AEON அறியப்படுவதாக தகவல். இந்த அமைப்பை ஜப்பான் முழுவதும் உள்ள தங்களது 240 அங்காடிகளில் நிறுவியுள்ளது. இதன் மூலம் முகத்தில் புன்னகை கொண்டுள்ள ஊழியர்கள், தங்களது வாடிக்கையாளர்களை திருப்தியடைய செய்வார்கள் என்பது அந்நிறுவனத்தின் நோக்கம்.

ஃபேஷியல் எக்ஸ்பிரெஷன்ஸ், வாய்ஸ் டோன், வாடிக்கையாளர்களை கிரீட் (Greet) செய்யும் தொனி உட்பட சுமார் 450 எலிமென்ட்ஸ்களை இந்த ஏஐ சிஸ்டம் கொண்டுள்ளதாம். மேலும், ஊழியர்கள் நடந்து கொள்ளும் வகையை பண்படுத்தும் வகையிலான கேமும் இதில் உள்ளதாக தகவல்.

இதற்காக சோதனை ஓட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எட்டு கடைகளில் இந்த அமைப்பை பொருத்தி, சுமார் 3,400 ஊழியர்களை AEON கண்காணித்துள்ளது. இதனால் மூன்று மாத காலத்தில் வாடிக்கையாளர்களை ஊழியர்கள் கையாளும் விதம் 1.6 மடங்கு இயல்பபை விட சிறப்பான வகையில் மேம்பட்டுள்ளது. அந்த ரிசல்ட்டை அடிப்படையாக வைத்து அனைத்து கடைகளிலும் மிஸ்டர்.ஸ்மைலை வைத்துள்ளது.

முகத்தில் புன்னகை பூக்க செய்வது இதயப்பூர்வமானதாக இருக்க வேண்டும். அது ஒரு ப்ராடக்டாக இருக்க கூடாது என்ற கண்டனங்களும் இதற்கு எழுந்துள்ளன. அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் முகத்தில் லேசாக புன்னகை மீட்டரை கூட்டினால் கூட மிஸ்டர்.ஸ்மைல் ஏஐ அடையாளம் கண்டு சொல்லிவிடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.