பாடசாலைகளில் பௌதீக வளங்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் நிதியை அதிகரிப்பது தொடர்பான யோசனையை ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற நிறுவனங்களுக்கு முன்வைப்பதாகவும், அதற்கான மதிப்பீட்டை தயாரித்துக் கொண்டிருப்பதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்தார்.
பாடசாலைகளில் பௌதீக வளங்களை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் தரத்தை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக நேற்று (24) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரண முன் வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவதற்காக நிதியுதவி வழங்கும் போது, தேசிய பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் ஊடாகவும் மாகாணப் பாடசாலைகளுக்காக மாகாணக் கல்வி அமைச்சு ஊடாகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
அது தவிர உலக வங்கியின் நிதியுதவியின் ஏதேனும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் கீழ் வழங்கப்படும் உதவிகள் ஆசிரியர்களின் பயிற்சிக்காக மற்றும் அவர்களின் தரத்தை உயர்த்துவதற்காகப் செலவிடப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போது 2025ஆம் ஆண்டிற்கு அவசியமான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த வருடத்தில் அந்நிறுவனங்களுக்கு குறித்த யோசனைகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.