அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த ஜோ பைடன்

கலிபோர்னியா,

இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த 21-ந்தேதி அறிவித்து இருந்தார். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், பைடன் தனது ஜனநாயகக் கட்சி மற்றும் நாட்டின் நலன்களை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். அத்துடன், கமலா ஹாரிசை அதிபர் தேர்தலில் நிறுத்துவதாக ஜோ பைடன் கூறினார்.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து ஜோ பைடன் பேசியதாவது;

“அமெரிக்காவை ஒன்றிணைக்க புதிய தலைமுறைக்கு இடம்கொடுப்பதே சிறந்த வழி என எண்ணி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்கள் ஒரு அதிபராக எனது பணியை செய்வதில் கவனம் செலுத்துவேன். வெறுப்பு, தீவிரவாதங்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன். எந்த வன்முறைக்கும் அமெரிக்காவில் இடமில்லை. அமெரிக்கா வலுவாகவும், பாதுகாப்பாகவும், சுதந்திர உலகின் தலைவராகவும் உள்ளது.

கமலா ஹாரிஸ் மிகவும் திறமையானவர். அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். துணை அதிபராக தேசத்தை வழிநடத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர். இன்னும் சில மாதங்களில் அமெரிக்காவின் எதிர்காலத்தை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். எனது விருப்பத்தை தெரிவித்தேன். இப்போது தேர்வு அமெரிக்க மக்களுடையது.”

இவ்வாறு அவர் பேசினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.