OPPO Reno 12 5G விற்பனை தொடங்குகிறது, வாய்ப்பைத் தவறவிடாமல் வாங்குவதற்கு இந்த காரணங்கள் போதுமா? அருமையான அம்சங்கள் கொண்ட ஓப்போ ரெனோ 12 5ஜி போனின் சிறப்பம்சங்களைத் தெரிந்துக் கொண்டால் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவது தான் ஸ்மார்ட்டான முடிவு என நீங்களே சொல்லிவிடுவீர்கள்.
ஏனென்றால், இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்ட OPPO Reno125G போன், புகைப்படம் எடுக்க சிறந்தது என்றால், AI பயன்பாடு வரம் என்றே சொல்லலாம். இந்த போன், மிகவும் ஸ்டைலானதகவும், வலிமையானதாகவும் உள்ளது. நமது வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கமாகிவிட்ட போன் வாங்குவதற்கு முன் அதைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
AI என அறியப்படும் செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில், தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் புரட்சியை கொண்டு வருகிறது. குறிப்பாக மொபைல் புகைப்படம் எடுக்கும் தொழில்நுட்பத்தின் ஏஐ-இன் பங்கு அதிகரித்துள்ளது. ஜூலை 12 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட OPPO இன் புதிய Reno12 5G ஃபோன் இந்த மாற்றத்தின் சகாப்தத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். மேம்பட்ட AI-இயங்கும் அம்சங்கள் அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கும்.
Reno 12 5G ஸ்மார்ட்போன், தனது AI திறன்களின் மூலம் பயனர்களுக்கு சிறந்த புகைப்பட அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது. அதன் ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த செயல்திறன், இந்த ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் நம்பகத்தன்மையை எதிர்பார்ப்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.
தொழில்நுட்ப புரட்சிக்கு உதாரணம்
Reno12 5G போன், OPPOவின் GenAI அம்சங்களால் இயங்குகிறது. வேடிக்கையான ஸ்டிக்கர்கள் மற்றும் எமோஜிகளாக புகைப்படங்களை மாற்றும் திறனுடன், தேவையற்ற கூறுகளை அகற்றி, தனிப்பட்ட உருவப்படங்களை உருவாக்கும் திறன் கொண்ட GenAI புதிய சாத்தியக்கூறுகளை முன்வைக்கிறது. உற்பத்தித் திறனிலும் இந்த போன் சிறப்பு வாய்ந்தது. நீண்ட குரல் பதிவுகளின் உடனடி மதிப்பாய்வை வழங்குகிறது. இது, எந்தவொரு விஷயத்திலும், உங்கள் குரல்பதிவை சில நொடிகளில் ஒன்றாக இணைத்துவிடும் திறன் பெற்றது.
AI மூலம் இயங்கும் இந்த செயற்கை நுட்ப அம்சங்கள், ஸ்மார்ட்போன்களில் முழுமை மற்றும் படைப்பாற்றல் இரண்டையும் ஒருங்கிணைக்கிறது. இதனால் பயனர்கள் இதுவரை கிடைக்காத சிறந்த அனுபவத்தைப் பெறுகின்றனர். வாழ்க்கையின் முக்கியமான தருணங்களைப் படமெடுக்க உதவும் சிறபபன கேமராவின் அம்சங்கள் அனைவரையும் ஈர்க்கும்.
OPPO Reno125G இன் 50MP Sony LYT-600 பிரதான கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 32MP செல்ஃபி கேமரா ஆகியவை உயர் தரமான மொபைல் புகைப்படம் எடுக்க உதவுகிறது. Reno125Gவின் மேக்ரோ கேமரா 2MP OV02B10 என்ற அளவில் உள்ளது. 4cm வரையிலான ஷாட்களை எடுக்க உதவும். சவாலான ஒளி நிலைகளிலும் அருமையான புகைப்படங்களை எடுக்க உதவும். நீங்களே எதிர்பாராத தெளிவு மற்றும் விவரங்களை வழங்குவதற்கு ஏற்ப தானாகவே நிகழ்நேரத்தில் அமைப்புகளை சரிசெய்துக் கொள்கிறது.
AI எரேசர் 2.0 (AI Eraser 2.0)
நீங்கள் எடுத்த உங்கள் அற்புதமான தருணத்தில் தேவையில்லாத இடையூறுகள் வந்துவிட்டது என்ற கவலையே வேண்டாம். OPPOவின் AI அழிப்பான் 2.0 இருக்க கவலை எதற்கு? ஒரே சொடக்கில் பின்னணியில் இருக்கும் தேவையில்லாத விஷயங்களை நீக்கிவிடலாம். பில்லியன் கணக்கான படங்களில் பயன்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்ட இந்த ஏஐ அம்சம், 98% என்ற அளவில் துல்லியமான புகைப்படத்தை வழங்குகிறது.
இந்த அம்சம் GenAI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பொருள்களைத் தவிர எஞ்சியிருக்கும் இடத்தை சீராக நிரப்புகிறது. இதனால், தொழில்முறை எடிட்டிங் மென்பொருளைப் போலவே வேலை செய்யும் திறனையும் கொண்டுள்ளது என்று சொல்லலாம்.
AI பெஸ்ட் ஃபேஸ் (AI Best Face)
இந்த அம்சமானது குழு புகைப்படங்கள் சரியானதாக இருப்பதை உறுதி செய்கிறது. குழுப் புகைப்படத்தில் யாராவது ஒருவர் கண்களை முடியிருந்தால், மூடிய கண்களை அடையாளம் கண்டு அவற்றை AIGC மூலம் சரிசெய்து, ஒவ்வொரு ஷாட்டிலும் ஒவ்வொருவரும் தங்களின் சிறந்த தோற்றத்தை உறுதிப்படுத்துகிறது. கண் சிமிட்டுவதால் ஏற்படும் த்ரோவே ஷாட்களுக்கு இனிமேல் குட்பை தான்…
AI க்ளியர் ஃபேஸ் (AI Clear Face)
ரெனோ 12-ன் முன்பக்கக் கேமரா மூலம் குழுப் புகைப்படம் எடுக்கும்போது, அது தானாகவே நபர்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்து சிறப்புப் பயன்முறைக்கு மாறுவதுடன், புகைப்படம் எடுத்த பிறகு, அதை உங்கள் ஆல்பத்தில் எடிட் செய்து, AI க்ளியர் ஃபேஸ் அம்சத்துடன் அனுப்பிவிடும். 10 பேரின் முகம், முடி மற்றும் புருவங்களை மீட்டெடுக்கலாம். பாரம்பரிய கிளவுட் எடிட்டிங்கிற்குப் பதிலாக பயன்படுத்தும்விதமாக, AI Clear Face, 1.8 வினாடிகளில் உங்கள் போனிலேயே தனிப்பட்ட திருத்தங்களை துரிதமாக செய்துவிடும்.
AI ஸ்டுடியோ
உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த AI Studio ஒன்றே போதும். இது சமீபத்திய GenAI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை தனித்துவமான டிஜிட்டல் அவதாரங்களாக மாற்றிவிடும். AI ஸ்டுடியோ மூலம் நீங்கள் தனிப்பயன் அவதாரங்கள் மற்றும் எமோஜிகளை உருவாக்கலாம், உங்கள் புகைப்படங்களை ஓவியங்களாகவும், ஓவியங்களை புகைப்படங்களகவும் மாற்றலாம், டிஜிட்டல் அவதாரங்களை உருவாக்கலாம் மற்றும் புகைப்படங்களில் பின்னணியை மாற்றலாம். இன்னும் நிறைய செய்ய முடியும்! AI ஸ்டுடியோ உங்கள் படைப்பாற்றலை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வரம்பற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ளது.