பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்கில் இலங்கை சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்களின் பலவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய,
400 கிராம் சதொச பால்மா பக்கெட் ஒன்றின் விலை 910 ரூபாவாகவும்,
ஒரு கிலோ கிராம் பாசிப்பயறு 965 ரூபாவாகவும்;,
நெத்தோலி ஒரு கிலோ கிராம் 950 ரூபாவாகவும்,
இந்திய பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 285 ரூபாவாகவும்;,
கடலை ஒரு கிலோ கிராம் 444 ரூபாவாகவும்,
கோதுமை மா ஒரு கிலோ கிராம் 185 ரூபாவாகவும்,
வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 258 ரூபாவாகவும்,
பச்சரிசி ஒரு கிலோ கிராம் 199 ரூபாவாகவும்,
பாகிஸ்தான் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 185 ரூபாவாகவும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
எனவே, இன்று (25) முதல் நாட்டில் உள்ள அனைத்து சதெச விற்பனை நிலையங்களினூடாகவும் பொதுமக்கள் இந்த பொருட்களை சலுகை விலையில் கொள்வனவு செய்ய முடியும் என்றும் சதொச நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.