- சுற்றுலாப் பயணிகளுக்காக 04 வைத்தியசாலைகளில் வசதியாக பணம் செலுத்தும் நோயாளர் அறைகளை நிறுவ 80 மில்லியன் ரூபா..
இலங்கையின் சுற்றுலாத் துறையை வலுப்படுத்தி சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சுற்றுலா அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து (22) கொழும்பு ‘கோல்பேஸ்’ ஹோட்டலில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன மற்றும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுகாதார அமைச்சின் ஆதரவுடன், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) ஆரம்ப சுகாதார வசதிகளைக் கொண்ட 04 வைத்தியசாலைகளுக்கு சுற்றுலாப் பயணிகள் கட்டணம் செலுத்தும் நோயாளர் அறைகளை அமைப்பதற்காக நிதி வசதிகளை வழங்கியுள்ளது. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதார வசதிகள் வழங்கப்படுவது தொடர்பான ஒப்பந்தம் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நிறைவில் தம்புள்ளை, பண்டாரவளை, பொத்துவில் மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், மேற்கூறியவற்றில் சௌகரியமாக பணம் செலுத்தும் நோயாளர் அறை வசதிகளை உருவாக்குவதற்கு தலா 20 மில்லியன் ரூபாவும் 80 மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இன்று சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் வகையில், சுகாதார அமைச்சு, புத்த மத அமைச்சு, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியனவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பாலித பெர்னாண்டோ, பணிப்பாளர் நாயகம் பி.எச்.ஆர். சரீபோ டீன், பிரதிப் பணிப்பாளர் நாயகம் உபாலி ரத்நாயக்க, சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய மருத்துவர் பாலித மஹிபால, சமய கலாசார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன ஆகியோர் கலந்துகொண்டனர்.