ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 விருது விழா பிரம்மாண்டமாய் நடந்தேறியது. அந்த நிகழ்வில் `Best Actress – Negative Role’ என்கிற கேட்டகரியில் சன் டிவியில் ஒளிபரப்பான `பாண்டவர் இல்லம்’ தொடருக்காக நடிகை ராணிக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த விருதினை நடிகை யுவராணி வழங்கினார். மேடையில் பேசிய யுவராணி, ` ஆடியன்ஸ் எப்படி பாராட்டுவாங்களோ அந்த அளவுக்கு எப்படி திட்டுவாங்கன்னும் பார்த்திருக்கேன். வீட்ல கூட அப்படி திட்டு வாங்கி இருக்க மாட்டேன். சித்தி சீரியல் பண்றப்ப எனக்கு நடந்த எக்ஸ்பீரியன்ஸ் பற்றி சொல்றேன்!’ என தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் பயணித்துக் கொண்டிருப்பவர் ராணி. 90ஸ் கிட்ஸ் பலருக்கும் இவர் பரிச்சயமானவர். `சின்னத்திரையில் வில்லினாலே இவங்க தான்பா!’ எனப் பலரும் சொல்லும் அளவுக்கு நெகட்டிவ் ரோலில் மிரட்டி இருப்பவர். தொடர்ந்து தொடர்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
விருதினைப் பெற்றுக் கொண்ட ராணி பேசும் போது, ` அலைகள் தொடரில் தான் என் சீரியல் லைஃப் ஆரம்பமாச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நெகட்டிவ் ரோலுக்காக விருது வாங்குறது இதுதான் முதல் முறை! பிறந்ததுல இருந்து எல்லாரும் நல்லா படிக்கணும்னு தான் சொல்லுவாங்க. எங்க அப்பா நல்லா நடிக்கணும்னு சொல்லி அனுப்புவார். அப்பா சினி ஃபீல்டுல இருந்தாங்க. இப்ப இல்ல. நிறைய அவார்டு வாங்கணும்… நல்லா நடிக்கணும் அப்படின்னு தான் எப்பவும் சொல்லிட்டிருப்பார். என் கணவர், மகன், மகள் இவங்க தான் என் லைஃப். இந்த தருணத்தில் இவங்க எல்லாருக்கும் நன்றி சொல்ல விரும்புறேன்!’ என நெகிழ்ந்து பேசினார்.
ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023-இன் நெகிழ்ச்சித் தருணங்களைக் காண, இணைப்பைக் க்ளிக் செய்யுங்கள்…