Samsung Galaxy Z Flip6: இந்த சூப்பர் ஸ்மார்ட்டான போனை கடைகளில் வாங்கலாம் அல்லது, Samsung.com, Amazon மற்றும் Flipkart ஆகியவற்றிலிருந்தும் இவற்றை ஆர்டர் செய்யலாம். வாங்குவது எங்காக இருந்தாலும், வாங்கப்போகும் போனின் முக்கியமான அம்சங்களை தெரிந்துக் கொண்டால் தானே, அதை சரியாக பயன்படுத்த முடியும். Galaxy Z Fold6, Galaxy Z Flip6 மற்றும் பிற Galaxy தயாரிப்புகளின் விலை என்ன என்பதையும் அவற்றின் சிறப்பம்சங்களையும் தெரிந்துக் கொள்வோம்.
Samsung Galaxy Z Flip6 ஐ ரூ.4,250க்கு புக் செய்யலாம்
சாம்சங் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி இசட் ஃபோல்ட்6 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப்6 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றைத் தவிர, புதிய கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா, வாட்ச் 7 மற்றும் பட்ஸ்3 ஆகியவற்றையும் சாம்சங் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
Galaxy Z Fold6, Galaxy Z Flip6 ஆர்டர்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, மடிக்கக்கூடிய ஃபோல்டபிள் போன்களுடன் ஒப்பிடும்போது,Galaxy Z Fold6 மற்றும் Z Flip6க்கான முன்கூட்டிய ஆர்டர்கள் இந்தியாவில் முதல் 24 மணி நேரத்தில் 40% அதிகரித்துள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய Galaxy Z Flip6 ஐ வாடிக்கையாளர்கள் 4,250 ரூபாய்க்கும் (நோ-காஸ்ட் EMI) மற்றும் Galaxy Z Fold6 ஐ 6,542 ரூபாய்க்கும் (நோ-காஸ்ட் இஎம்ஐ) 24 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் EMI உடன் வாங்கலாம், இத்துடன் வேறு சில நன்மைகளும் கிடைக்கும். சாம்சங்கின் நொய்டா தொழிற்சாலையில் இந்திய நுகர்வோருக்காக Galaxy Z Fold6 மற்றும் Z Flip6 தயாரிக்கப்படுகின்றன.
Galaxy Z சீரிஸ்
புதிய மடிக்கக்கூடிய போன்கள்மெல்லிய மற்றும் இலகுவான Galaxy Z சீரிஸ் போன்களாகும். இவற்றின் வடிவமைப்பு அருமை என்றால், மற்றும் அவற்றின் விளிம்புகள் நேராக இருக்கும். Galaxy Z தொடரில், சிறந்த தரமான அலுமினியம் மற்றும் Corning Gorilla Glass Victus 2 பயன்படுத்தப்பட்டுள்ளது.
Galaxy Z Fold6: பல்வேறு AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் இயங்கும் அம்சங்கள் மற்றும் கருவிகளுடன் வருகிறது. அவற்றையும், சிறப்பம்சங்களையும் தெரிந்துக் கொள்வோம்.
Note Assist: இந்தக் கருவி, குறிப்பு எடுப்பதை இன்னும் எளிதாக்குகிறது.
Composer: இந்த கருவி எழுதும் போது உதவுகிறது மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது.
Sketch to Image: இந்த கருவி மூலம் நீங்கள் வரையும் ஒரு படத்தையோ அல்லது வரைபடத்தையோ உண்மையான படமாக மாற்றலாம்.
Interpreter: இந்தக் கருவி பிற மொழிகளைப் புரிந்துகொள்ளவும் பேசவும் உதவுகிறது.
Photo Assist: இந்த கருவி உங்கள் புகைப்படங்களை சிறப்பாக மாற்ற உதவுகிறது.
Instant Slow-Mo: இந்த கருவியின் மூலம் வீடியோவை மெதுவாக்க பார்க்கலாம்.
Galaxy Z Fold6 விலை
12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய Galaxy Z Fold6 போனின் விலை ரூ.1,64,999 இல் தொடங்குகிறது என்றால், கேலக்ஸி Z Flip6 இன் விலை 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் ரூ.1,09,999 இல் தொடங்குகிறது. கேலக்ஸி வாட்ச் அல்ட்ராவின் விலை ரூ.59,999, கேலக்ஸி வாட்ச்7ன் 40மிமீ மாடலின் விலை ரூ.29,999 முதல் தொடங்குகிறது என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.