கூபே ஸ்டைல் பஸால்ட் எஸ்யூவி மாடல் ஆனது இந்தியாவில் சிட்ரோயன் (Citroen Basalt) நிறுவனத்தால் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் தற்போது உற்பத்தி நிலை மாடலின் படங்கள் ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்ற C3 ஏர் கிராஸில் இடம் பெற்றிருக்கின்ற 1.2 லிட்டர் இன்ஜினை பயன்படுத்திக் கொள்ள உள்ளது.
Citroen Basalt
பஸால்ட் மிக நேர்த்தியான கூபே ஸ்டைலாக அமைந்த டாடா கர்வ் உட்பட பல்வேறு நடுத்தர எஸ்யூவி ரக மாடல்கள் ஆன ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளும்.
110 PS பவர் மற்றும் 190Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் Puertech 110 டர்போ பெட்ரோல் என்ஜினில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் என இரண்டு விதமான ஆப்ஷனையும் பெறலாம்.
வயர்லெஸ் சார்ஜிங், கீலெஸ் என்ட்ரி, கனெக்ட்டிவிட்டி வசதிகள் பெற்ற 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் வசதிகளும் பெறக்கூடும்.
எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் ஹெட்லைட் அமைந்துள்ளது. உட்புறம் முன் மற்றும் பின்பக்க அமர்பவர்களுக்கு ஆர்ம்ரெஸ்ட்களை மேம்படுத்துகிறது. ஹெட்ரெஸ்ட்களுக்கு பக்க ஆதரவை வழங்குகிறது. பின்புற ஆர்ம்ரெஸ்டில் ஃபோன் ஹோல்டர் ஸ்லாட்டும் கிடைக்கலாம்.